ஓய்வு பெற்றார் எய்ம்ஸ் இயக்குநர் வேணுகோபால் | சற்றுமுன்...




ஓய்வு பெற்றார் எய்ம்ஸ் இயக்குநர் வேணுகோபால்

ஓய்வு பெற்றார் எய்ம்ஸ் இயக்குநர் வேணுகோபால்

தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் இயக்குநர் வேணுகோபால், புதன்கிழமை பணி ஓய்வு பெற்றார்.

இதனிடையே, வேணுகோபாலுக்கு 6 மாத காலம் பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் எனக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தில்லி உயர் நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது.

மீரா மிஸ்ரா என்பவர் தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், இதய நோயால் பாதிக்கப்பட்ட எனது மகனுக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் வேணுகோபால்தான் சிகிச்சை அளித்து வருகிறார். இந்நிலையில் சிகிச்சை முடிவதற்குள் அவர் பணி ஓய்வு பெறவுள்ளார். இதனால் எனது மகனின் சிகிச்சை பாதிப்படையும் நிலை உள்ளது. எனவே, அவர் 6 மாதம் பணியில் நீட்டிக்க உத்தரவிட்டு உதவ வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதி சிஸ்தானி முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, எஸ்ம்ஸ் மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபோன்ற நிலையில் ஒரு நோயாளிக்காக இயக்குநர் வேணுகோபாலுக்கு பணி நீட்டிப்பு வழங்க இயலாது எனக் கூறி, அந்த மனுவை தள்ளுபடி செய்தார்.
 
 

குறிச்சொற்கள்: , , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்