ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றிபெற்ற 96 பேரின் எதிர்காலம் கேள்விக்குறி? | சற்றுமுன்...




ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றிபெற்ற 96 பேரின் எதிர்காலம் கேள்விக்குறி?

ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றிபெற்ற 96 பேரின் எதிர்காலம் கேள்விக்குறி?

ஐ.ஏ.எஸ். தேர்வு முடிவுகள் திருத்தி வெளியிடப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் ஏற்கெ னவே தேர்வு பெற்றதாக அறிவிக்கப்பட்ட 96 பேர் காத்தி ருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 பேரும் அடங்குவர்.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற பதவிகளுக்கான தேர்வை நடத்தும் மத்திய தேர்வாணையத்தின் நடைமு றைகளில் வெளிப்படைத் தன்மை இல்லை எனக் காலம் காலமாகவே குறைகூறப்பட்டு வந்திருக்கறது.

கடந்த ஆண்டுவரை பொதுப் பிரிவில் தேர்வானவர்க ளுக்குக்குட இட ஒதுக்கீட்டு அடைப்படையில் பதவி களை ஒதுக்கி வந்தது தேர்வாணையம். இதை எதிர்த்து கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. தேர்வாணையத்தின் இடஒதுக்கீட்டு நடைமுறை செல்லத் தக்கது அல்ல என நீதிமன்றம் தீர்ப் பளித்தது. இதையடுத்து, சரியான இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றி 2007-ம் ஆண்டுக்கான முடிவு களை கடந்த மே மாதம் தேர்வாணையம் வெளியிட் டது. இதன்படி, 734 பேர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள் ளிட்ட பணிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் பொதுப்பிரிவில் 382 பேரும், பிற்படுத்தப்பட்டோர் பிரி வில் 190 பேரும், தாழ்த்தப்பட்டோர் பிரிவில் 109 பேரும், பழங்குடியினர் பிரிவில் 53 பேரும் அடங்குவர்.

பொதுப்பிரிவின் கீழ் தேர்வான 382 பேரில் பிற்படுத் தப்பட்ட பிரிவினர் 76 பேர், தாழ்த்தப்பட்ட பிரிவினர் 19 பேர், பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒருவரும் அடங்கு வர்.

இந்த நிலையில், உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய தேர்வாணையம் மேல்முறை யீடு செய்தது. இந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத் தின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.

திருத்தப்பட்ட பட்டியல்: இதையடுத்து, மே மாதம் வெளியிடப்பட்ட பட்டியலை ரத்து செய்துவிட்டு, புதிய பட்டியலை சில நாள்களுக்கு முன் தேர்வாணை யம் வெளியிட்டது. அதன்படி தேர்வு செய்யப்பட்டவர் களின் எண்ணிக்கை 734-ல் இருந்து 638 ஆகக் குறைக்கப் பட்டுள்ளது.

அதாவது, பொதுப் பிரிவில் தேர்வான பிற்படுத்தப் பட்டோர் இடஒதுக்கீட்டின்கீழ் கொண்டு வரப்பட்ட னர். இதனால் அந்த இடஒதுக்கீட்டு வரிசையில் கடைசி யாக இருந்த 96 பேர் தேர்வுப் பட்டியலில் இருந்து நீக்கப் பட்டனர். இதில் 76 பேர் பிற்படுத்தப்பட்ட பிரிவையும் 19 பேர் தாழ்த்தப்பட்ட பிரிவையும் ஒருவர் பழங்குடி வகுப்பையும் சேர்ந்தவராவார். இதில் 18 பேர் தமிழ்நாட் டைச் சேர்ந்தவர்கள். பொதுப் பிரிவில், தேர்வானவர்க ளுக்கு அடுத்த நிலையில் இருந்த 96 பேரைத் தேர்வு செய்து காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள தாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களையும் சேர்த்து காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டோரின் எண் ணிக்கை 192-ஆகி இருக்கிறது.

குறிச்சொற்கள்: , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்