வெளிநாடு வாழ் இந்தியர் நலனுக்கு தனி நிதி: மத்திய அரசு பரிசீலனை
வெளிநாடு வாழ் இந்தியர் நலனுக்கு தனி நிதி: மத்திய அரசு பரிசீலனை
வெளிநாடு வாழ் இந்தியர்களின் நலன் காக்க தனி நிதி ஒதுக்கீடு செய்வது குறித்து மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
பல்வேறு நாடுகளில் பணியாற்றிக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான இந்தியர்கள் பயன் அடையும் விதத்தில் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.
தாயகம் திரும்பியதும்…: வெளிநாட்டில் பணியாற்றிக் கொண்டிருக்கும் இந்தியர்களின் செலவுக்கு நிதி அளித்தல் உள்பட பல்வேறு விஷயங்களுக்கு இந்த நிதி பயனுள்ளதாக அமையும். வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பிய பிறகும் இங்கு அவர்களுக்குத் தேவையான உதவி இந்த நிதி மூலம் செய்து கொடுக்கப்படும்.
இதற்கான ஒதுக்கீடு செய்வதற்கான நடவடிக்கை இந்த நிதி ஆண்டில் இருந்தே மேற்கொள்ளப்படும் என, வெளிநாடு வாழ் இந்தியர்கள் விவகாரத் துறை அமைச்சகம் சார்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடு வாழ் இந்தியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவர்களின் நலனை காக்க பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக ஏற்கெனவே மத்திய அரசு காப்பீட்டுத் திட்டத்தையும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்