பீல்ட் மார்ஷல் மானக் ஷா மரணம்-பங்களாதேஷை விடுவித்தவர் | சற்றுமுன்...




பீல்ட் மார்ஷல் மானக் ஷா மரணம்-பங்களாதேஷை விடுவித்தவர்

பீல்ட் மார்ஷல் மானக் ஷா மரணம்-பங்களாதேஷை விடுவித்தவர்
    

 

Manekshaw

டெல்லி: பீல்ட் மார்ஷல் சாம் மானக் ஷா மரணமடைந்தார்.

ஊட்டியில் உள்ள வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் நேற்றி்ரவு அவர் காலமானார். அவருக்கு வயது 94.

1971ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரை முன்னின்று நடத்தி பாகிஸ்தானையே உடைத்து பங்களாதேஷை விடுவிடுத்து தனி நாடாக்கிக் காட்டியவர் மானக் ஷா.

கடந்த பல ஆண்டுகளாகவே நுரையீரல் பிரச்சனையால் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந் நிலையில் நேற்று காலை அவர் கோமா நிலைக்கு சென்றார். நள்ளிரவு 12.30 மணிக்கு அவர் உயிர் பிரிந்தது.

பத்ம விபூஷன், மிலிட்டர் கிராஸ் உள்ளிட்ட நாட்டின் மிக உயரிய சிவிலியன், ராணுவ விருதுகளைப் பெற்ற மானக் ஷா, இந்திய ராணுவ வீரர்களால் சாம் பகதூர் என அன்புடன் அழைக்கப்பட்டவர்.

மிகச் சிறந்த போர் தந்திர நிபுணரான மானக் ஷா, பாகிஸ்தான் ராணுவத்தை 14 நாட்களில் நிலை குலைய வைத்தார். அந்தப் போரில் அவரே பிரன்ட் லைனில் நின்று நேரடியாக தாக்குதலை நடத்தினார்.

இந்திய ராணுவத்தின் மிகச் சிறந்த பிரிவான கூர்கா ரெஜிமெண்ட்டின் முதல் கமாண்டரும் அவர் தான். பின்னர் இந்திய ராணுவத்தின் பீல்ட் மார்ஷல் நிலைக்கு உயர்ந்தார்.

வீரத்துடன் எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும் தலை வணங்காத நெஞ்சமும் மிக கலகலப்பான சுபாவமும் கொண்டவர்.

1971ம் ஆண்டு டிசம்பரில் ராணுவத் தளபதியாக இருந்த மானக் ஷாவிடம், பாகிஸ்தானுடனான போருக்கு தயாரா என பிரதமர் இந்திரா காந்தி கேட்டபோது, மானக் ஷா சொன்ன பதில், “I am always ready sweetie”.

கலகலவென சிரித்த இந்திராவிடம் அடுத்த பதினான்கே நாட்களில் வெற்றிக் கனியைத் தந்தார். கிழக்கு பாகிஸ்தானில் அந் நாட்டுப் படைகளை சரணடைய வைத்து அதை பின்னர் பங்களாதேஷாக மாற்றி விடுவித்தது இந்தியா.

பாகிஸ்தான் சரணடையும் நிகழ்ச்சியில் பங்கேற்க டாக்காவுக்கு செல்லுமாறு இந்திரா கூறியபோது, அதை மறுத்துவிட்ட மானக் ஷா, அவர்கள் என்னிடம் சரணடைய வேண்டாம்.. அந்த மரியாதை நமது ராணுவத்தின் கிழக்கு மண்டல கமாண்டர் ஜக்ஜித் சிங் அவுராவுக்கே கிடைக்க வேண்டும் என்று கூறிவிட்டவர் மானக் ஷா.

முன்னதாக நேரு பிரதமராக இருந்தபோது அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் எம்ஜிகே மேனன் இவரை ஓரங்கட்ட ஆரம்பித்தார். இதனால் மெதுவாக ஷா ஒதுங்கினார்.

ஆனால், அருணாச்சல பிரதேசத்தைக் கைப்பாற்றி சீனா ராணுவம் துவம்சம் செய்த நிலையில் ஷாவின் உதவியை தான் நாடினார் நேரு. மேலும் மேனனையும் ராஜினாமா செய்ய வைத்தார் நேரு.

இதையடுத்து அருணாச்சல் விரைந்த ஷா, வீரர்களை முடுக்கிவிட்டு சீனா மேலும் முன்னேறுவதை வெற்றிகரமாக தடுத்து நிறுத்திக் காட்டினார்.

1914ம் ஆண்டு ஏப்ரல் 3ம் தேதி அம்ரிஸ்தரில் பார்ஸி குடும்பத்தில் பிறந்தவர் ஷா.

ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற பின் தமிழகத்தில் செட்டில் ஆனார் ஷா. நீலகிரி மலையின் குன்னூரில் அவர் வசித்து வந்தார்.

குறிச்சொற்கள்: ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



2 மறுமொழிகள் to “பீல்ட் மார்ஷல் மானக் ஷா மரணம்-பங்களாதேஷை விடுவித்தவர்”

  1. Thamizarasi சொல்கிறார்:

    One of my friend visited his house. My another friends mom was a military nurse. She told me how he joked in one of his visit to the hospital, “Hey you are the second one to see my naked ass”. It is a big loss to country. Thanks for bringing in the news to blogdom.

    with regards
    Thamiz

  2. சுந்தர் சொல்கிறார்:

    செய்தி: தமிழ்முரசு.காம்

    *** நாட்டைக் காத்த மானக்ஷாவின் இறுதி அஞ்சலி ****

    !!! வி.ஐ.பி. அரசியல்வாதிகள், முப்படை தளபதிகள் “மிஸ்ஸிங்”!!!!

    *** நன்றி மறவாத வங்கதேசம் ***

    பாகிஸ்தான் போரில் இந்தியாவுக்கு வெற்றித் தேடித் தந்த முன்னாள் ராணுவத் தலைமை தளபதி
    பீல்டு மார்ஷல் மானக்ஷாவின் (Sam Hormusji Framji Jamshedji Manekshaw) இறுதிச்
    சடங்கில் ஜனாதிபதி, பிரதமர், வி.ஐ.பி அரசியல்வாதிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை.
    ஆனால் வங்கதேச முப்படைத் தளபதிகள் மட்டும் நன்றி மறக்காமல் தங்கள் நாட்டின் விடுதலைக்கு
    காரணமான மானக்ஷாவுக்கு நேரில் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

    இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த 1971ம் ஆண்டு போர் நடந்தபோது இந்திய ராணுவத்தின்
    தலைமை தளபதியாக இருந்தவர் ஜெனரல் மானக்ஷா. இவர் வகுத்த போர் யுத்திகள்தான்,
    பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவிடம் சரணடைய வழிவகுத்தது. (இது குறித்த விவரமான,
    கட்டாயம் நாம் படிக்க வேண்டிய கட்டுரை இங்கே:
    http://thatstamil.oneindia.in/.....kshaw.html
    ) அப்படி நாட்டையே காப்பாற்றிய ராணுவ தளபதி மானக்ஷா தனது 94 வயதில் நேற்று
    முன்தினம் இறந்தார்.

    நியாயப்படி பார்த்தால் முன்னாள் ஜனாதிபதியோ, பிரதமரோ இறந்தால் அவர்களுக்கு கொடுக்க
    வேண்டிய முக்கியத்துவத்தைவிட இவருக்கு அதிகமாகவே கொடுத்திருக்க வேண்டும். ஆனால்,
    மானக்ஷாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த ஜனாதிபதி, பிரதமர், மாநில முதல்வர்கள் உட்பட
    எந்த அரசியல் வி.ஐ.பி.க்களும் நேரில் வரவில்லை. ஏன், நமது நாட்டின் முப்படைத்
    தளபதிகள் கூட இதில் கலந்து கொள்ளாததுதான் வருத்தம் அளிக்கும் விஷயம்.

    தரைப்பட தளபதி ரஷ்யா சென்றுள்ளதால், அவரால் இறுதி சடங்கில் கலந்து கொள்ள
    முடியாததற்கு காரணம் கூறலாம். ஆனால் கடற்படை தளபதி சுரேஷ் மேத்தா, விமானப்படை
    தளபதி மேஜர் ஆகியோர் டெல்லியில்தான் இருந்தனர். அவர்கள் நேரில் வராமல் தங்கள் சார்பில்
    மலர்வளையம் வைக்க தனக்கு கீழ்நிலையில் உள்ள அதிகாரிகளை அனுப்பிவைத்து விட்டனர். ராணுவ
    இணையமைச்சர் பள்ளம் ராஜூ மட்டும் இந்தியா சார்பில் இறுதி அஞ்சலி செலுத்தினார்.
    மற்றவர்கள் சார்பில் மலர்வளையம் மட்டுமே வைக்கப்பட்டது.

    வங்கதேச விடுதலைக்கு இந்திய ராணுவ தலைமை தளபதி மானக்ஷா காரணமாக இருந்தார்
    என்பதற்காக அந்த நாட்டின் முப்படை தளபதிகள் சமீன், அலீம் சித்திக்தி ஆகியோர் நேரில்
    ஆஜராகி மானக்ஷாவின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இவர்களின் நன்றி
    உணர்வு கூட, சொகுசு வாழ்க்கையில் புரளும் நம் நாட்டு வி.ஐ.பி.க்களுக்கு இல்லாமல்
    போனதுதான் வேதனை. பேருக்கு இரங்கல் செய்தியை வெளியிட்டுவிட்டு கண்டுகொள்ளாமல்பலர்
    இருந்து விட்டனர்.

    அமெரிக்க அணுசக்தி �®’ப்பந்த விவகாரத்தில் ஆட்சியை கவிழாமல் காப்பாத்துவது எப்படி என்ற
    தீவிர ஆலோசனையில் டெல்லி வி.ஐ.பி அரசியல்வாதிகள் இருந்துவிட்டனர். அவர்களே
    செல்லாதபோது நாம் ஏன் செல்ல வேண்டும் என மற்றவர்கள் இருந்து விட்டனர்.
    இது குறித்து ராணுவ பிரிகேடியர் �®’ருவர் கூறுகையில், “நாட்டுக்காக போராடிய
    ஹீரோக்களுக்கு நமது நாட்டில் மதிப்பில்லை. 25 ஆண்டுகளுக்கு முன் உலகக் கோப்பை
    கிரிக்கெட் போட்டியில் வென்ற அணியினருக்கு இப்போது விழா கொண்டாடி
    மதிப்பளிக்கப்படுகிறது. ஆனால் நாட்டை காத்த உண்மையான ஹீரோக்களை போருக்கு பின் மறந்து
    விடுகிறார்கள்” என்றார்.

    ****

    அவமானமாக உணர்கிறேன்! :(

    -சுந்தர்

உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்