ஓரகடம் பகுதியில் நோக்கியா,சீமென்ஸ் மொபைல் தொழிற்சாலை. | சற்றுமுன்...




ஓரகடம் பகுதியில் நோக்கியா,சீமென்ஸ் மொபைல் தொழிற்சாலை.

சென்னையை அடுத்த ஒரகடம் பகுதியில் 300 கோடி ரூபாய் முதலீட்டில் அமையவுள்ள நோக்கியா சீமென்ஸ் நெட்வொர்க் தொழிற்சாலை தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (ஜுன்-26) முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்தானது.

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த நோக்கியா சீமென்ஸ் நெட்வொர்க் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் துணை நிறுவனமாக நோக் கியா சீமென்ஸ் நெட்வொர்க் நிறுவனம் மொபைல் தயாரப்புக்கான சாதனங்கள் மற்றும் நிலையான தகவல் உள்கட்டமைப்புக்கான சாதனங்களை தயாரிப்பற்கும் மேலும் பல்வேறு மின்னணு வன்பொருள் களுக்கான சாதனங்களை தயாரிப்பதற்கும் ஒரகடத்தில் உள்ள சிப்காட் உயர் தொழில்நுட்ப சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் தொழிற்சாலை ஒன்றை அமைக்க திட்டமிட்டிருக்கிறது.

இந்த தொழிற்சாலையின் மூலம் சுமார் 400 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பும், 100 பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்கும்.

நோக்கியா, மோட்டோ ரோலா, சாம்சங் போன்ற நிறுவனங்கள் சென் னையில் ஏற்கனவே தங்கள் தொழிற்சாலைகளை அமைத்துள்ள நிந லயில், நோக்கியா சீமென்ஸ் நிறுவனத்தின் இப்புதிய தொழிற் சாலை, சென்னை “இந்தியாவின் தொலைத் தொடர்பு வன்பொருள் மையம்’ என்பதனை மேலும் உறுதிப்படுத்திட உதவும்.

முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில், இப்புதிய தொழிற் சாலை யை அமைப்பதற்காக நடைபெற்ற புரிந்துணர்வு’ ஒப்பந்ததத்தில் தமிழக அரசின் சார்பாக, தொழில் துறைச் செயலாளர் எம்.எப். பரூக்கியும், நோக்கியா சீமென்ஸ் நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் சார்பாக அந்நிறுவ னத்தின் இயக்குனர் சுரேஷ் வாத்வானியும் கையெழுத்திட்டனர்.

குறிச்சொல் ஏதும் இல்லை.

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்