இந்திய மாணவர்களுக்கு ஆக்ஸ்போர்டு பல்கலை. பாராட்டு | சற்றுமுன்...




இந்திய மாணவர்களுக்கு ஆக்ஸ்போர்டு பல்கலை. பாராட்டு

இந்திய மாணவர்களுக்கு ஆக்ஸ்போர்டு பல்கலை. பாராட்டு

 உலகின் சிறந்த மாணவர்களில் இந்திய மாணவர்களும் அடங்குவர் என்று இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கூறியுள்ளது.

மேலும் அதிக எண்ணிக்கையில் இந்திய மாணவர்களை சேர்க்க விரும்புவதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக வேந்தர் கிறிஸ் பேட்டென் கூறினார்.

பிரதமர் மன்மோகன் சிங், திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மான்டெக் அலுவாலியா போன்றவர்கள் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. தற்போது அங்கு 257 இந்திய மாணவர்கள் படிக்கின்றனர்.

ஆனால் இந்தியர்களை விட சீன மாணவர்கள்தான் அதிக எண்ணிக்கையில் அங்கு படிக்கின்றனர். சீன மாணவர்களில் மூன்றில் ஒருபங்குதான் இந்திய மாணவர்கள் அங்கு படிக்கின்றனர்.

இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் எங்கள் பல்கலைக்கழகத்தில் அதிகமாக சேர வேண்டும் என்று விரும்புகிறோம். ஏனெனில் உலகின் சிறந்த மாணவர்கள் எங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம் என்றார் வேந்தர் கிறிஸ் பேட்டென்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக மாணவர்களில் 25 சதவீதம் பேர் எம்.பி.ஏ. படிக்கின்றனர். ஆனால் சமூக அறிவியல் மற்றும் மானிடவியல் படிக்க மாணவர்கள் அதிகமாக முன்வர வேண்டும் என்றார் அவர்.

இந்திய மாணவர்களின் எண்ணிக்கைக் குறைவாக இருந்தாலும், அவர்கள் இங்கு பெறும் கல்வி உதவித் தொகை (ஸ்காலர்ஷிப்) சீன மாணவர்களை விட அதிகமானது. ரோட்ஸ் ஸ்காலர்ஷிப் உள்பட 54 விதமான ஸ்காலர்ஷிப்களை இந்தியா மாணவர்கள் கடந்த ஆண்டு வென்றுள்ளனர் என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் அறிக்கை கூறுகிறது.

இங்கு ஓராண்டு எம்.பி.ஏ. படிக்க ரூ.40 லட்சம் செலவாகிறது.
 
 

குறிச்சொற்கள்: , , , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்