தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்? | சற்றுமுன்...




தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்?

தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்?
 
பா.ம.க. நீக்கப்பட் டுள்ள நிலையில், ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் தமிழக காங்கிரஸ் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளது.

இதைப் பயன்படுத்தி, அமைச்சரவை யில் பங்கு கேட்கும் காங்கிரஸôரின் குரல் இன்னும் ஓங்கி ஒலிக்கும் என்று கட்சி வட்டாரத்தில் பேச்சு நிலவுகிறது.

கூட்டணியில் பாமக இருக்கும் போது திமுக கூட்டணி தேவைக்கு அதிகமான பெரும்பான்மையுடன் வலிமை வாய்ந்த தாக இருந்தது. அந்தச் சூழ்நிலையி லேயே, அமைச்சரவையில் தங்களுக்கு பங்கு வேண்டும் எனக் கேட்டு குரல் எழுப்பினர் காங்கிரஸ் கட்சியில் ஒரு கோஷ்டியினர்.

இந்த நிலையில், கூட்டணியில் இருந்து பாமக நீக்கப்பட்டுள்ளது. இதனால், காங் கிரஸ் கட்சியின் ஆதரவு இல்லாவிட் டால் திமுக ஆட்சி கவிழ்வது உறுதி.

இதை காங்கிரஸ் கட்சி பயன்படுத்திக் கொண்டு அமைச்சரவையில் பங்கு கேட்க வாய்ப்பு இருக்கிறது என்று காங்கி ரஸ் கட்சியின் ஒருபிரிவினர் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
நாடாளுமன்றத் தேர்தல் வரும் சூழ லில், காங்கிரசும், திமுகவும் தங்களுக்குள் சுமுகமான உறவை வைத்துக் கொள் ளவே விரும்பும். திமுக தலைமை, தில்லி யில் காங்கிரஸ் கட்சித் தலைமையிடம் நேரடித் தொடர்பு வைத்துள்ளது.

அமைச்சரவையில் பங்கு கேட்டு, காங் கிரஸ் கட்சியின் ஏதாவது ஒருகோஷ்டி போர்க்கொடி தூக்கினால் அதைத் தடுக்க கட்சியின் மேலிடத்திடம் பேசவும் திமுக தயங்காது என்று காங்கிரஸின் மற் றொரு சாரார் கருத்துத் தெரிவிக்கின்ற னர்.

குறிச்சொற்கள்: , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்