பட்டதாரி என்று பொய் சொன்ன ஒரிசா அமைச்சர் மீது நடவடிக்கை | சற்றுமுன்...




பட்டதாரி என்று பொய் சொன்ன ஒரிசா அமைச்சர் மீது நடவடிக்கை

பட்டதாரி என்று பொய் சொன்ன ஒரிசா அமைச்சர் மீது நடவடிக்கை

பட்டதாரி என்று பொய் சொன்ன ஒரிசா போக்குவரத்து அமைச்சர் ஜெயநாராயண் மிஸ்ரா (பா.ஜ.க.) மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒரிசாவில் 2004-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தது. பா.ஜ.க. சார்பில் தேர்தலில் போட்டியிட்ட ஜெயநாராயண் மிஸ்ரா, புர்லா நாக் கல்லூரியில் 1984-ம் ஆண்டு பி.ஏ. பட்டம் பெற்றதாக வேட்பு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

தேர்தலில் வென்ற அவர் அமைச்சரானார். அவரது வேட்பு மனுவில் குறிப்பிட்ட தகவல் பொய் என்று இப்போது தெரியவந்துள்ளது. இந்த விவரம் தலைமைத் தேர்தல் அதிகாரிக்குத் தெரிவிக்கப்படும் என்று சம்பல்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பி.கே. பட்நாயக் கூறினார்.

இந்தக் குற்றச்சாட்டை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக அமைச்சர் ஜெயநாராயண் மிஸ்ரா கூறினார்.

இதுபோன்ற பொய்யான தகவலை வேட்புமனுவில் குறிப்பிட்டதற்காக அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ. பதவியையும் அவர் இழக்க வாய்ப்புள்ளதாக பா.ஜ.க.வின் மற்றொரு தலைவர் தெரிவித்தார்.
 
 

குறிச்சொற்கள்: , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்