சாகித்திய அகாதமியைக் கண்டித்து புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் | சற்றுமுன்...




சாகித்திய அகாதமியைக் கண்டித்து புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம்

சாகித்திய அகாதமியில் புதுச்சேரிக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்காததைக் கண்டித்து புதுச்சேரியில் இன்று (08-06-2008) காலை 11.00 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பல்வேறு அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகள், தமிழ் அமைப்புகள் சேர்ந்து இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தின.

சாகித்திய அகாதமியின் ஆலோசனைக்குழு உறுப்பினர்களாக புதுச்சேரி அரசின் பரிந்துரையின்படி மகரந்தன, தமிழக அரசின் பிரதிநிதியாக இராம.குருநாதன், பல்கலைக்கழக பிரதிநிதியாக இரா.மோகன் மற்றும் தமிழ்ச் சங்கப் பிரதிநிதியாக சிற்பி பாலசுப்ரமணியம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இதில் தமிழ்மொழியின் ஒருங்கிணைப்பாளராக சிற்பி பாலசுப்ரமணியத்தை மற்ற மூன்று உறுப்பினர்களும் சேர்ந்து தேர்வு செய்தனர். மேலே உள்ள நான்கு பொதுக்குழு உறுப்பினர்களும் சேர்ந்து மேலும் 6 செயற்குழு உறுப்பினர்களைத் தேர்வு செய்ய வேண்டும். இதன் அடிப்படியில் புதுச்சேரி மகரந்தன் செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்ய மூவர் பெயரை ஒருங்கிணைப்பாளர் சிற்பி பாலசுப்ரமணியத்திடம் அளித்துள்ளார். ஆனால், இவர் பரிந்துரை செய்த ஒருவரையும் நியமிக்காமல் தன்னிச்சையாக தனக்கு வேண்டிய ஒருவரை சிற்பி நியமித்துள்ளார். பரிந்துரையின் அடிப்படையிலோ அல்லது மற்ற உறுப்பினர்களை கலந்தாலோசனையின் அடிப்படையிலோ அவர் தேர்வு செய்யாமல் தன்னிச்சையாக அவர் தேர்வு செய்துள்ளார். இது புதுச்சேரி இலக்கிய வட்டத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசு பணத்தில் இயங்கும் இத்தகைய நிறுவனங்கள் தமது உறுப்பினர்களுக்கே வெளிப்படை தன்மை இல்லாமல் இருக்கும் போது, பொதுமக்களுக்கு வெளிப்படைத் தன்மையுடன் எப்படி இருக்கும் என எதிர்பார்க்க இயலும் என்று இந்த தமிழ் அமைப்புகள் கோருகின்றன.

மேலும் புதுச்சேரியில் சாகித்திய அகாதமி சார்பாக நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான ஒன்பது திட்டமங்களை மகரந்தன் அளித்திருந்தார் அதில் அத்தனையும் அதன் ஒருங்கிணைப்பாளர் நிராகரித்துள்ளார். புதுச்சேரியோ அதன் அருகிலுள்ள மாவட்டங்கள் எதிலும் நிகழ்ச்சி எதற்கும் இதன் ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் அளிக்கவில்லை. பிறகு ஏன் புதுச்சேரி பகுதியிலிருந்து ஒரு பிரதிநிதி என்று புதுவையைச் சேர்ந்தவர்கள் கேள்வி எழுபபினர். சென்ற பத்து ஆண்டுகளாக புதுச்சேரியில் சாகித்திய அகாதமி சார்பாக இரண்டே இரண்டு நிகழ்ச்சிகள் மட்டுமே நடந்துள்ளன.

அத்துடன் ஆரோவில் (தமிழகம்) பகுதியைச் சேர்ந்த இரா.மீனாட்சி என்பவரை சிற்பி அவர்கள் பரிந்துரையின் அடிப்படையில் புதுச்சேரி பிரதிநிதியாக தேர்வு செய்துள்ளனர். அவர் தமிழ் இன விரோத சிந்தனை கொண்டவர். எனவே, அவரை திரும்பப் பெற வேண்டும். புதிதாக புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டவர்கள் கோரினர்.

புதுவைத் தமிழ்ச் சங்கம், தமிழ் எழுத்தாளர் கழகம், பெரியார் திராவிடர்க் கழகம், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, தமிழ் வளர்ச்சி நடவடிக்கைக் குழு, புதுச்சேரி பூர்வ குடிமக்கள் உரிமைப் பாதுகாப்பு பேரவை, மீனவர் விடுதலை வேங்கைகள், தமிழர் தேசிய இயக்கம், செம்படுகை நன்னீரகம், பூவுலகின் நண்பர்கள், சமூக நீதி போராட்டக் குழு இராவணன் பகுத்தறிவு இயக்கம், புரட்சிப் பாவலர் இலக்கியப் பாசறை உள்ளிட்ட 27 அமைப்புகள் சேர்ந்து இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தின.

100க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டதில் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் ஒரு தொடக்கம் தான் “சாகித்திய அகாதமியின்” நடவடிக்கை ஏதும் மேற் கொள்ளாமல் புதுச்சேரியைத் தொடர்ந்துப் புறக்கணிக்குமானால் அடுத்த கட்ட போராட்டத்தை நடத்துவதை தவிர வேறு வழியில்லை என இப்போராட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றிய மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ. சுகுமாரன் தெரிவித்தார்.

குறிச்சொல் ஏதும் இல்லை.

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



6 மறுமொழிகள் to “சாகித்திய அகாதமியைக் கண்டித்து புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம்”

  1. Periyar Critic சொல்கிறார்:

    அத்துடன் ஆரோவில் (தமிழகம்) பகுதியைச் சேர்ந்த இரா.மீனாட்சி என்பவரை சிற்பி அவர்கள் பரிந்துரையின் அடிப்படையில் புதுச்சேரி பிரதிநிதியாக தேர்வு செய்துள்ளனர். அவர் தமிழ் இன விரோத சிந்தனை கொண்டவர்.

    Is not Auroville part of Puducherry.They want persons whom they like to be appointed as representative of Puducheery.
    Sirpi’s actions might be wrong. But is this demand that her appointment should be revoked is justified. No.
    Sukumaran and Co want their own henchmen/women everywhere.
    100 people participate on behalf of 27 organizations. I guess most of these are just letter pad oraganizations
    or just one person shows.Things may be not well with Sahitya Akademi but this sort of opposition is not the response to that. Let them explain what is their problem
    with Meenakshi. They may not agree with her poetry or views. But branding her ‘தமிழ் இன விரோத சிந்தனை கொண்டவர்’ is meaningless because Sukumaran’s biases
    and prejudicies are too well known.

  2. mookkan சொல்கிறார்:

    thooya thamizhil ezhuthum Puducherry ezhuthaalargalai “Tamizh Theeviravaathigal” endru naagarigamattra muraiyil vimarsanam seyum meenakshi ” thamizh pattralaraa?”

  3. gopal சொல்கிறார்:

    In his connection, I have nothing to say. But I came to know that Sirpi is not a good man.

  4. பரிசுபெறுவதில் சிற்பி கோஷ்டியினர் கைதேர்ந்தவர்கள். சிற்பி அப்துல் இரகுமானுக்குத் தன் பெயரில் உள்ள அறக்கட்டளை விருதை பரிந்துரை செய்து பரிசு கிடைக்கச்செய்வார். அப்துல் இரகுமான் சீதக்காதி விருதை சிற்பிக்கு வழங்குவார். பெண் கொடுத்து கட்டிக்கொள்ளும் மாமன் மச்சான்கள் வாழ்க!சிற்பியின் சிஷ்யன் சேதுபதி வழியாக மீனாட்சியின் மாளிகைக்கு (ஆரோவில்) சிற்பி நெருக்கமானார். தன் மனைவியுடன் வந்து ஓய்வெடுத்து ஆரோவில் விழாவில் பங்குகொண்டு ஆனந்தப்பட்ட சிற்பி மீனாட்சிக்குக் கைம்மாறு - உப்பிட்டவரை உள்ள அளவும் நினைக்கச் செய்ய நினைத்தார். சாகித்திய அகாடெமி ஆலோசனை உறுப்பினர் பதவியை மீனாட்சிக்கு வழங்கினார். தரகு வேலை பார்த்த சேதுபதிக்கு குன்றக்குடி அடிகளார் பற்றி இந்திய இலக்கியச் சிற்பி வரிசையில் எழுத வாய்ப்பு வழங்கினார். இந்த சேதுபதி தம்பிரான் குன்றக்குடி அடிகளாரை பகுத்தறிவுக் கவிஞராக்கி பாரதிதாசன் அரசு கல்லூரிப் பாடத்திட்டத்தில் சேர்த்துள்ளார். சிற்பி உங்களுக்குத்தெரியுமா? குன்றக்குடி அடிகளார் கவிஞர் என்று! அப்படியென்றால் நீங்கள் தொகுத்த மன்னில் தெரியுது வானம் சாகித்திய அகாடெமி நூலில் இடம்பெறும் கவிஞர்கள் பட்டியலில் குன்றக்குடி அடிகளையும் சேர்ததிருக்கலாமே! குன்றக்குடி அடிகளார் மீனாட்சி இருக்கும் ஆரோவில் சென்று ஓய்வெடுக்கும்படி தரம் தாழ்ந்துவிட்டாரே! ஆரோவில் பற்றி புதுச்சேரியில் உள்ள எல்லோருக்கும் தெரியும்.அங்கு குன்றக்கொடி அடிகளாருக்கு என்ன வேலை? எல்லாம் சேதுபதிகளுக்கே வெளிச்சம்.
    சிற்பி நீங்கள் கவனமாக காய் நகர்த்துவதில் கில்லாடியாயிற்றே!
    பெருஞ்சித்திரனாரைக் கவிஞராக ஏற்றால் ஆபத்துவரும் என நினைத்து மன்னில் தெரியுது வானத்தில் விட்டுவிட்டவராயிற்றே!
    தங்கப்பா கவிதையை கவிதையாக நினைத்து உங்கள் மன்னில் தெரியுது வானத்தில் சேர்க்காத நீங்கள் எப்படி உங்கள் விருதைத் தங்கப்பாவுக்குக் கொடுத்தீர்கள்!
    இப்பொழுது சொல்லுங்கள்! அதுவும் மீனாட்யின் பரிந்துரைதானே! இது புதுச்சேரியில் எல்லோருக்கும் தெரியுமே சிற்பி!
    சாகித்திய அகாடமி விருது பட்டியல், ஒருங்கிணைப்பாளர், ஆலோசனைக் குழுக்களின் உற்ப்பினர், ஆலோசகர் பட்டியலை எடுத்துப்பார்த்தால் தமிழுக்கு உண்மையாகப் பாடுபட்டவர்களின் பெயர்கள் இருக்காது. பாலா, சிற்பி குழுக்களின் பட்டியல்தான் இருக்கும். இவனுங்க தமிழ்க்கவிஞர்கள் என்ற போர்வையில் இந்திய அரசின் பணத்தை வகை தொகையின்றி சுருட்டியுள்ளனர். இவர்களுக்குள் பரிசு கொடுப்பது. இவர்கள் உறுப்பினர்களாகிக் கொண்டு தன் வட்டத்தை, ஆதரவாளர்களை வலுப்படுத்திக்கொள்வது என்ற நிலையை ஒழித்து உண்மையாக மக்கள் எழுச்சிக்கு எழுதிய அறிஞர்களை உறுப்பினர்களாக்க வேண்டும்.
    இதே நிலை நீடித்தால் நீங்கள் சாகித்திய அகாடெமி பரிசை மீனாட்சிக்கு கொடுப்பீர்கள் உண்மைதானே சிற்பி?

  5. சிற்பி ரசிகன் சொல்கிறார்:

    சிற்பி சாகித்திய அகாதமி விருது பெற்ற வரலாறு

    செண்பகம் இராமசாமி, கோவைஞானி சாகித்திய அகாதெமி குழுவில் இருந்தனர். சிற்பிக்கு விருது வழங்க இருவரும் நினைத்தனர். காலந்தாழ்ந்து வந்த இந்திராபார்த்தசாரதி என்ற உறுப்பினர் தன் இனத்துக்காரரான அசோகமித்திரன் வயதானவர். அவர் இறப்பதற்குள இந்த வருட விருது அவருக்கு வழங்கலாம். அடுத்த ஆண்டு விருது சிற்பிக்கு வழங்கலாம் என்றார். ஞானி, இந்திராபார்த்தசாரதியுடன் சேர்ந்துகொண்டு அசோகமித்திரனுக்கு வழங்கலாம் என்றார். இதனை மறுத்த செண்பகம் இராமசாமி அவர்களிடம் வாதிட்டு நானும் இந்திராபார்த்தசாரதியும் மெஜாரிட்டியாக உள்ளோம். எதிர்க்கும் நீங்கள் மைனாரிட்டி.எனவே அசோகமித்திரனுக்கு இறப்பதற்குள் வழங்குகிறோம் என்றனர். இறப்பார் என விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட அசோகமித்திரன் உயிரோடு உள்ளார். சிற்பிக்குச் சிபாரிசு செய்த அம்மா செண்பகம் இறந்துவிட்டார். இதை அறிந்த சிற்பி தனக்குப்பரிசு கிடைக்கவில்லையே என ஏங்கினார். தனக்கு எதிரான கோவை ஞானியின்மேல் கோபப்பட்டார். இவ்வாறு கோபம் கொப்பளிக்க இருந்த சிற்பியைச் சமாதானம் செய்ய இந்திரா பார்த்தசாரதி திட்டமிட்டார். அதன் படி இந்திரா பார்த்தசாரதி முயற்சியில் சிற்பியின் தலைமையில் அசோகமித்திரனுக்கு பாராட்டு விழா நடந்தது. வாழ்க

    அதன்பிறகு ஆள் பிடித்து சிற்பி பரிசு வாங்க 7 ஆண்டு ஆனது,
    1996 அப்பாவின் சினேகிதர் - அசோகமித்திரன்(சிறுகதைகள்)
    2002 ஒரு கிராமத்து நதி சிற்பி (கவிதை)

    இப்படி ஆள்பிடித்து சாதியை வைத்து தான் சாகித்திய அகாடெமி விருது வழங்கப்படுகிறது. பிரபஞ்சனுக்கு விருது நீண்ட நாட்களாக கொடுக்கவில்லை ஏனென்றால் சாகித்திய அகாடெமியில் நடக்கும் விசயங்களை அவர் வெளியில் சொல்கிறார், அதனால் அவரை சாகித்திய அகாடெமி புதுவை நிகழ்ச்சியில் கூட அழைக்கவில்லை. பின்னர் வேறு வழியில்லாமல் அவருக்கும் விருது கொடுத்தார்கள் என்பது வேறு விசயம் ஆனால், இப்போதும் அவர் சாகித்திய அகாடெமியில் நடக்கும் ஆள்பிடிப்பு தரம் பின்பற்றாமை பற்றி அவர் இன்னும் விமர்சித்தே வருகிறார்.

  6. மூக்கையன் சொல்கிறார்:

    சிற்பியின் சித்து விளையாட்டு மிக நீண்டது. இம்முறை சிற்பியை சாகித்ய அகாதெமிக்கு சிபாரிசு செய்தவர்கள் தமிழகத்தில் இருந்து யாரும் இல்லையாம். கல்கத்தாவில் உள்ள தமிழ் சங்கத்தை சிபாரிசு செய்யும்படி கெஞ்சிக்கூத்தாடி கடிதம் வாங்கினாராம். கடந்தமுறை ஒருங்கிணைப்பாளராக இருந்த இவரது நெருங்கிய நண்பர் பாலாவின் பரிந்துரையும் சேர்ந்துகொள்ள இந்த சிற்பி தேர்வு செய்யப்பட்டாராம். இம்முறை இரா. மோகனை தமிழ் குழுவின் ஒருங்கிணைப்பாளராக ஆக்க உறுதி அளித்திருந்தாராம் பாலா. ஆனால், தனது நண்பர் சிற்பி உறுப்பினரான பிறகு தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டு, சிற்பியை ஒருங்கிணைப்பாளராக ஆக்க வெளிநாட்டில் இருந்து வேலைமெனக்கிட்டு தொலைபேசியில் அழைத்து, “நான்தான் உங்களை உறுப்பினராகத் தேர்வு செய்தேன். நான் சொல்கிறேன் சிற்பியை ஒருங்கிணைப்பாளாராக தேர்வு செய்ய ஓட்டு போடுங்கள்” என்று அன்பான மிரட்டல் விடுத்ததாகவும் மதுரை வட்டாரம் தகவல் சொல்கிறது. இதற்கு நன்றிக் கடனாகத்தான் பாலா சிபாரிசின்பேரில் நடராஜன் என்பவரை தமிழ் ஆலோசனைக்குழு ஊறுப்பினாராத் தேர்வு செய்தாராம், சிற்பி. (நடராஜன் வீட்டு காபி “நன்னா” இருக்கும் என்று அடிக்கடி பெருமைபட்டுக்கொள்கிறாராம் திருவாளர் சிற்பி). முன்னாள் உறுப்பினர் பாலாவுக்கு ஒரு ஆள். ஆனால் தற்போதைய புதுச்சேரி உறுப்பினர் மகரந்தனுக்கு பெப்பே… புதுச்சேரிக்காரர்கள் கோபத்திலும் ஒரு நியாயம் இருப்பதாக சாகித்யா அகாதெமி சென்னை கிளை அலுவலர் ஒருவர் அங்கலாய்த்துக் கொள்கிறார்களாம். அது என்ன நியாயம் என்று அடுத்த வாரம் சொல்வதாக சொல்லியிருக்கிறார்கள். அது என்ன என்று தெரிந்து எழுதுகிறேன்.

உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்