முஸ்லீம்லீக் கட்சியின் மணி விழா மாநாடு - கருணாநிதி பங்கேற்பு
| முஸ்லீம்லீக் கட்சியின் மணி விழா மாநாடு - கருணாநிதி பங்கேற்பு |
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மணி விழா மாநாடு ஜூன் 21ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இதில் முதல்வர் கருணாநிதி கலந்து கொள்கிறார்.
இதுதொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் டாக்டர் சையத் சத்தார் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மணி விழா ஜூன் 21ம் தேதி சென்னை தீவுத் திடலில் நடைபெறுகிறது.
மாநாட்டுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவர் கே.எம். காதர் மொய்தீன் எம்.பி. தலைமை தாங்குகிறார். முதல்வர் கருணாநிதி பங்கேற்று உரை நிகழ்த்துகிறார்.
மத்திய அமைச்சர்கள் ஏ.கே.அஹமது, ஜி.கே.வாசன், தி.க. தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் மாநாட்டில் கலந்து கொள்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
![]()
மேலும் அமீரக காயிதெ மில்லத் பேரவை தலைவர் எம். அப்துல் ரஹ்மான், பொதுச் செயலாளர் ஏ. லியாக்கத் அலி, தளபதி தாஹா, ஹமீதுர் ரஹ்மான் உள்ளிட்டோரும், சவுதி அரேபியா, மஸ்கட், ஹாங்காங், பாங்காங், சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பணிபுரியும் முஸ்லிம் லீக் ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
மேலும் சமூகநல்லிணக்கத்திற்கான சிராஜுல் மில்லத் விருது, தொழில்துறையில் சிறப்புச் சேர்த்தோருக்கு விருது உள்ளிட்டவை வழங்கப்பட இருக்கின்றன.
http://www.muslimleaguetn.com/
குறிச்சொற்கள்: சமூக நல்லிணக்கம், மணிவிழா, மாநாடு, முஸ்லிம் லீக், விருது, கருணாநிதி, அமீரகம்இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்