5வது ஆண்டுவிழா கொண்டாட மத்திய அரசுக்கு தகுதியில்லை: ஏ.பி.பரதன்
5வது ஆண்டுவிழா கொண்டாட மத்திய அரசுக்கு தகுதியில்லை: ஏ.பி.பரதன்
பண வீக்கம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை கட்டுப்படுத்தத் தவறிய மத்திய அரசு 5வது ஆண்டு தொடக்கவிழா கொண்டாட தகுதியில்லை என்று ஏ.பி.பரதன் விமர்ச்சித்துள்ளார்.
காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்து இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைவதைத் தொடர்ந்து 5ஆம் ஆண்டு தொடக்க விழாவை சிறப்பாக கொண்டாட கூட்டணிக்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய சி.பி.ஐ. பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன், 5ஆம் ஆண்டு தொடக்க விழா குறித்த கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, ”பணவீக்கம், விலைவாசி உயர்வு மற்றும் மக்களுக்கு போதிய உணவு கிடைக்காமை உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கவனிக்கத் தவறிவிட்டது. மக்கள் பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் மக்கள் பிரச்சினையை கருத்தில் கொள்ளாமல் 5வது ஆண்டு தொடக்க விழா எடுப்பது என்பது எந்த வகையில் நியாயம். மேலும் அதற்கான தகுதி அவர்களுக்கு இல்லை” என்றார்.
இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்