சவூதிக்கு புதிய இந்தியத் தூதர் | சற்றுமுன்...




சவூதிக்கு புதிய இந்தியத் தூதர்

சவூதிக்கு புதிய இந்தியத் தூதர்

சவூதி அரேபியவுக்கான இந்தியத் தூதராக சயீத் அகமது பாபா நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய தூதராக வரும் ஜூலை 2-ம் தேதி  அவர் பதவியேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1988-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். பிரிவைச் சேர்ந்த இவர், மேற்குவங்க மாநிலத்தில் பணியாற்றி வந்தார். தற்போது, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சைபுதீன் சோஸ்ஸின் தனிச் செயலராக உள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த சயீத் அகமது பாபா, “ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் யாத்தீரிகளுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்துவதே என் முதல் நோக்கம்’ என்றார்.

இந்திய-சவூதி இடையேயான உறவை மேலும் வலுப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக அவர் மேலும் கூறினார்.

தற்பொழுது சவுதி அரேபிய தூதராக முன்னாள் புதுச்சேரி முதல்வர் எம்.ஓ.எச். ஃபாரூக் இருந்து வருகிறார். இதன் காரணமாக தமிழர்கள் இந்திய தூதரகத்தை எளிதாக அணுக முடிந்தது குறிப்பிடத்தக்கது.

 

குறிச்சொற்கள்: , , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்