சிறிலங்காவில் அமைதி ஏற்பட உதவ விரும்புகிறேன்:ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் | சற்றுமுன்...




சிறிலங்காவில் அமைதி ஏற்பட உதவ விரும்புகிறேன்:ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

Peace and reconcilation conference osloசிறிலங்கா யுத்தபூமியில் அமைதி நிலவிட தாம் உறுதுணையாக இருக்க விரும்புவதாக ஆன்மிக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூறினார். இருதரப்பினரின் நம்பிக்கையையும் பெற்றிருப்பதாகக் கூறும் குரு தமக்கு யாரும் அழைப்பு அனுப்ப வேண்டியதில்லை என்று கூறினார். வீடு பற்றி எரியும்போது யாராவது அழைப்பிற்கு காத்திருப்பார்களா என்று நார்வேயிலிருந்து IANSக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில் கூறியுள்ளார். அவரது இந்தக் கருத்துக்கள் ஆஸ்லோவில் கடந்த வாரம் அவரது வாழும் கலை சார்பில் நடந்த அமைதி மாநாட்டின் முடிவுறையில் கூறினார்.

இந்த அமைதி மாநாட்டில் சிறிலங்கா அமைச்சர்கள், எதிர்கட்சி தலைவர்கள், புத்த பிக்குகள்,தமிழகத்திலிருந்து மதிமுக தலைவர் வைகோ, நார்வேயின் சிறிலங்கா சிறப்பு தூதர் யொன் ஹான்சென் பௌர் மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மாநாடு சூடாக இருந்தபோதும் ஒருவரும் வெளிநடப்பு செய்யவில்லை, அனைவருக்கும் அமைதிக்கான தீர்வு காண்பதில் முனைப்பு இருந்தது என்கிறார் ரவிசங்கர்.

அரசியல் தலைவர்களால் தீர்வு காணமுடியாத பிரச்சினைக்கு ஆன்மீகத் தலைவரால் முடியுமா என்ற கேள்விக்கு வல்லரசுகளால் மனிதர்களின் இதயங்களையும் மனதையும் இணைக்க முடியாது; மகாத்மா காந்தி தனது ஆன்மீக பலத்தால் சுதந்திர போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தினார். கொசொவோ,அயர்லாந்து,பாகு இங்கெல்லாம் அமைதி திரும்பியிருக்கும்போது சிறிலங்கா பிரச்சினையும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணுதல் முடியாத செயலல்ல எனக் கூறினார்.

I want to bring peace to Sri Lanka: Sri Sri Ravi Shankar

குறிச்சொற்கள்: , , , , , , , , , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்