குஜராத்: நர்மதையில் பேருந்து விழுந்து 44 பேர் மரணம்
புதன் காலை குஜராத் மாநில போக்குவரத்து கழக பேருந்தொன்று பொடெல்லி கிராமத்தில் அறுபது அடி ஆழமுள்ள நர்மதா நதியில் விழுந்ததில் பெரும்பாலும் பள்ளி செல்லும் சிறார் உள்ளிட்ட 44 பேர் மரணமடைந்துள்ளனர்.நான்கு சிறுவர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
அந்த பேருந்து டார்கோலிலிருந்து பொடெல்லிக்கு சென்று கொண்டிருந்தபோது காலை 6:30 க்கு ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால் நிகழ்ந்ததாகத் தெரிகிறது. பயணித்தவர்களில் பெரும்பான்மையினர் பள்ளி செல்லும் சிறார்களே. மீட்பு பணியை எளிதாக்க சர்தார் சரோவர் அணையிலிருந்து வெளியேறும் நீரை நிறுத்தி வைத்தனர். பேருந்து கால்வாயிலிருந்து வெளியே எடுக்கப்பட்டு விட்டது.
இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசு ஒரு இலக்கம் ரூபாய் நட்ட ஈடு அறிவித்துள்ளது.
Bus falls into Narmada canal, 44 killed
Gujarat: Bus carrying kids in mishap; 44 dead
குறிச்சொற்கள்: சிறுவர்கள், நர்மதா அணை, பேருந்து விபத்து, Bus accident, Gujarat, Narmadaஇந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்