முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர் அசார் சென்ற கார் பேருந்துடன் விபத்து
ஞாயிறு காலை மும்பையின் புறநகர் நவிமும்பை பகுதியில் உள்ள பாம்பீச் சாலையில், இதனை தொகுக்கும் பதிவரின் வீட்டருகே, மாநில அரசுபேருந்துடன் முன்னாள் அணித்தலைவர் முகமது அசாருத்தீனின் மகிழ்வுந்து மோதியதில் சிறுகாயங்களுடன் அவர் தப்பினார்.அவரும் அவரது ஓட்டுநர் அமர்நாத் அல்குபாலும் அடுத்துள்ள மகாத்மா காந்தி மருத்துவமனையில் சிகிட்சை/முதலுதவி அளிக்கப்பட்டனர். அசாரின் இரு மகன்களும் பின்ன்னிருக்கையில் பயணம் செய்திருந்தனர்; அவர்களுக்கும் முதலுதவி அளிக்கப்பட்டது. உரான் சென்று கொண்டிருந்த பேருந்தில் சில பயணிகளே இருந்தனர். அவர்களுக்கும் பேருந்து ஓட்டுநருக்கும் காயமேதும் ஏற்படவில்லை.
அசாரும் அவரது மக்களும் சோலாப்பூரில் கிரிக்கெட் விளையாட தங்கள் ஹோண்டா CR-V வண்டியில் சென்று கொண்டிருந்தனர். வண்டியிலிருந்த காற்றுப்பைகள் உப்பியதால் அசாரும் ஓட்டுநரும் தப்பியதாக காவல்துறையினர் கூறினர்.
Azhar’s car hit by speeding bus
குறிச்சொற்கள்: azharuddin, சாலை விபத்து, கிரிக்கெட், அசாருத்தீன், cricket, road accidentஇந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்