விமானமோட்டிக்கும் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் சண்டை வலுக்கிறது
கோழிக்கோட்டில் ஏஇ இந்தியா விமானம் தாமதமானதை அடுத்து அதன் விமான தலைவர் ரஜத் ரானாவிற்கும் மாநிலங்களவை உறுப்பினர் அப்துல் வகாபிற்கும் இடையே எழுந்த பிரச்சினை பூதாகாரமாக வளர்கிறது. விமான ஓட்டிகளின் சங்கம் வகாப் மன்னிப்பு கோரவில்லையெனில் உலக அளவில் எடுத்துச் சென்று அவரை கறுப்புப் பட்டியலில் சேர்க்க முயலப் போவதாக கூறியுள்ளது. அவ்வாறு செய்யப்பட்டால் அவரால் அமெரிக்கா போன்ற நாடுகளுக்குச் செல்ல முடியாது.
அதே நேரம் எம் பி யின் ஆதரவாளர்கள் காப்டன் ரஜத் ரானாவின் பணிக்கு உலை வைக்கப் பார்க்கிறார்கள். அவர் தற்சமயம் துபாயில் தனது குடும்பத்தினருடன் உள்ளார். அவர திரும்பியபிறகே அவரது கருத்தை அறிய முடியும் விமானத்துறை அமைச்சர் பிரபுல் பாடேல் நடந்த சம்பவத்தின் முழு விவரம் அறிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். ஒரு சிறுவிதயம் பெரிதாக்கப் பட்டிருக்கிறது என்று அமைச்சர் கூறினார்.
குறிச்சொற்கள்: Air India, ஏர் இந்தியா, தகராறு, வகாப், pilot, Wahabஇந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்