பெங்களூருவில் ஆசியாவில் முதல் செயற்கை இதய துணைகருவி அறுவைசிகிட்சை சாதனை
பெங்களூருவின் நாராயணா இருதயாலயாவில் 54 வயது மனிதருக்கு ஆசியாவிலேயே முதன்முறையாக செயற்கை இதய கருவி பொருத்தப்பட்டுள்ளது. கர்நாடகா மின்சார வாரியத்தில் வேலைபார்த்த வெங்கடகிருஷ்ணைய்யாவிற்கு ஐந்து வருடங்களாக இதயம் பழுதடைந்திருந்தது. அவருக்கு நாராயணா இருதயாலாவில் இடது வெண்டிரிக்கிளுக்கு துணைபுரியும் கருவியை பொருத்த முடிவு செய்தனர். இந்தக் கருவி இதயத்திற்கு அதிக இரத்தம் பாய்வதை உறுதி செய்கிறது. அதனை இயக்கும் மின்கலத்தையும் கட்டுப்பாட்டுக் கருவியையும் அவர் எப்போதும் உடன் வைத்திருக்க வேண்டும். இந்த சிகிட்சையின் பின்னர் யாருடைய உதவியும் இன்றி நடமாடவும் படிகள் ஏறவும் முடிகிறது.
இரண்டு கோடி பேர் இதயம் வேலைசெய்யாது அவதிப்படும் நாட்டில் இந்த அறுவை சிகிட்சை முறை மிகவும் முக்கியமானதொன்று. வளர்ந்து வரும் வைத்திய சுற்றுலாவிற்கும் இது துணை போகும்.
Bangalore hospital conducts first artificial heart transplant
குறிச்சொற்கள்: சாதனை, சிகிச்சை, பெங்களூரு, இதய மாற்று அறுவை, Bangalore, Heart, Surgeryஇந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்