மதுரை சித்திரைத் திருவிழா-16ம் தேதி துவக்கம்
| மதுரை சித்திரைத் திருவிழா-16ம் தேதி துவக்கம் |

மதுரை: மதுரையின் முத்திரைத் திருவிழாவான சித்திரைத் திருவிழா வருகிற 16ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கள்ளழகர் 20ம் தேதி மதுரை வைகை ஆற்றில் இறங்குகிறார்.
ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் பிரசித்தி பெற்ற கள்ளழகர் திருவிழா நடைபெறும்.
இந்த ஆண்டு திருவிழா ஏப்ரல் 16 ம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
ஏப்ரல் 18 ம் தேதி அன்று அழகர் கோவிலிருந்து, கள்ளழகர் திருக்கோலம் பூண்டு அழகர் பெருமான் மதுரைக்கு புறப்படுகிறார்.
ஏப்ரல் 19 ம் தேதி அன்று தல்லாகுளத்தில் எதிர்சேவை நடைபெறும்.
ஏப்ரல் 20 ம் தேதி காலை 7.05 மணியிலிருந்து 7.20 க்குள் வைகை ஆற்றில் குதிரை வாகனத்தில் இறங்குகிறார் அழகர்.
அழகர் மலையிலிருந்து வைகை ஆற்றுக்கு வரும் கள்ளழகருக்கு வழியெங்கும் மண்டகப் படிகளில் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறும்.
சித்திரைத் திருவிழாவை சிறப்பாக நடத்தும் பொருட்டு பல்வேறு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.
http://thatstamil.oneindia.in/news/2008/04/07/tn-madurai-chithirai-festival-to-begin-on-april-16.html
இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்