படப்பிடிப்பு குழுவினரின் அஞ்சல் வழி உண்ணாவிரதம்
தமிழ் திரையுலகமே ஒன்றுகூடி சென்னையில் நடந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டிருக்கையில் பெரம்பலூரில் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்கள் ஒரு திரைப்பட குழுவினர்.
இந்த உண்ணாவிரதத்தின் விபரத்தை தயாரிப்பாளர் சங்கத்திற்கு அஞ்சல் மூலம் அனுப்பியிருக்கிறார்களாம். மணிவண்ணன் மகன் ரகுவண்ணன் நாயகனாக நடிக்கும் தமிழ் தேசம் படத்தின் படப்பிடிப்பு பெரம்பலூரில் நடந்து வருகிறது. அச்சச்சோ, மலரினும் மெல்லிய, மாணவன் நினைத்தால் படங்களில் நடித்த வர்ஷினி என்ற ஆதிரா கதாநாயகியாக நடிக்கிறார்.
படப்பிடிப்பு நடந்த பொறியியல் கல்லூரி வாசலிலேயே ஒரு பந்தலை போட்டு யூனிட்டோடு உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்து விட்டார்கள். படத்தின் இயக்குனர் தமிழ்செல்வா உள்ளிட்ட அத்தனை பேரும் கன்னடர்களுக்கு எதிராக கோஷம் எழுப்பி உண்ணாவிரத பந்தலை பரபரப்பாக்கினார்கள். விஷயத்தை கேள்விப்பட்ட ஜெயா டி.வி, ராஜ் டி.வி, ஏ.எம்.என் கன்னல் நிருபர்கள் அங்கே கூடவும் சென்னை போலவே அங்கேயும் உண்ணாவிரதம் களைகட்டியதாம்.
நன்றி: தமிழ்சினிமா
ஆங்கிலத்தில்: IndiaGlitz - Thamizh Desam Unit’s Hunger Strike - Tamil Movie News
குறிச்சொற்கள்: திரைப்படம், திரையுலகம், நோன்பு, படம், பொருளாதாரம், பொழுதுபோக்கு, போராட்டம், வணிகம், கிளர்ச்சி, உண்ணாவிரதம்இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்