இந்திய மத்திய அமைச்சரவை மாற்றம் | சற்றுமுன்...




இந்திய மத்திய அமைச்சரவை மாற்றம்

இந்தியாவின் மத்திய அமைச்சரவை ஞாயிற்றுகிழமை மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் தலைவர் வி. நாராயணசாமி உள்பட புதிதாக ஏழு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். புதிய அமைச்சர்களில் 6 பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். ஒருவர், லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி கட்சியைச் சேர்ந்தவர்.

ஞாயிற்றுகிழமை மாலை புதுடெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், புதிய அமைச்சர்களுக்கு குடியரசுத் தலைவர் பிரதிபா பாடீல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

புதிய அமைச்சர்களாக, நியமிக்கப்பட்ட

  1. முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எம்.எஸ். கில்,
  2. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பக்ரோடியா,
  3. புதுவை நாராயணசாமி ஆகிய மூன்று பேரும் மாநிலங்களவை உறுப்பினர்களாக உள்ளனர்.
  4. ஜோதிராதித்ய சிந்தியா,
  5. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஜிதின் பிரசாதா,
  6. ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராமேஸ்வர் ஓரான் மற்றும்
  7. பிகாரின் ரகுநாத் ஜா ஆகிய நால்வரும், மக்களவையிலிருந்து புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

புதிய அமைச்சர்கள் யாருக்கும் காபினட் அந்தஸ்து தரப்படவில்லை. அனைவரும் இணை அமைச்சர்களாகவே நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

மணிசங்கர் அய்யர் வகித்து வந்த விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை, தனிப்பொறுப்பாக எம்.எஸ். கில்லுக்குத் தரப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில், மணிசங்கர் அய்யர் பஞ்சாயத்துராஜ் மற்றும் வடகிழக்கு மாநில மேம்பாட்டு அமைச்சராகத் தொடர்ந்து நீடிக்கிறார்.

நாராயணசாமிக்கு நாடாளுமன்ற விவகாரம் மற்றும் திட்டமிடல் துறையும், ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத் தொடர்புத்துறையும் வழங்கப்பட்டிருக்கிறது. தகவல் தொழில்நுட்பத்துறையில் ஏற்கெனவே உள்ள ஷகீ்ல் அகமது, உள்துறை இணை அமைச்சராக மாற்றப்பட்டிருக்கிறார்.

பக்ரோடியாவுக்கு நிலக்கரித்துறையும், ஜிதின் பிரசாத்துக்கு எஃகுத் துறையும் வழங்கப்பட்டிருக்கிறது. மற்ற புதிய அமைச்சர்களின் துறைகள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இன்னும் சில இலாகாக்கள் மாற்றியமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, அமைச்சரவை விரிவாக்கத்துக்கு முன்னதாக, மத்திய அமைச்சரவையிலிருந்து 6 அமைச்சர்கள் பதவி விலகினார்கள். சுரேஷ் பச்செளரி, தாசரி நாராயணராவ், எம்.வி. ராஜசேகரன், டி. சுப்பராமி ரெட்டி, அகிலேஷ் தாஸ் மற்றும் மாணிக்ராவ் கேவிட் ஆகிய இணை அமைச்சர்கள் பதவி விலகியிருக்கிறார்கள்.

நன்றி: பிபிசி

மேலும் விவரங்களுக்கு:

1. The Hindu : Front Page : Seven new faces in Union Council of Ministers

2. BBC NEWS | Middle East | India PM Singh reshuffles cabinet

3. PM shuffles cabinet; Gill, Scindia, Prasada new faces - livemint: “Seven new ministers of state (MoS) took oath while six existing junior ministers resigned earlier in the day”

குறிச்சொல் ஏதும் இல்லை.

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்