முட்டை தின்றால் மார்பக புற்றுநோய் வருவதை தடுக்கலாம்
உணவில் முட்டை உண்பதை அதிகரித்தால் அதிலுள்ள கோலைன் (choline) என்ற வேதிப்பொருளால் மார்பக புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூற்றினை 24% வரை குறைக்க முடியும் என ஆய்வொன்று கூறுகிறது. வட கரோலினா பல்கலை.யில் ஸ்டீவன் செய்சல் (Steven H Zeisel, MD, PhD, University of North Carolina) தலைமையில் நிகழ்த்தப்பெற்ற இந்த கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வில் மார்பக புற்றுநோயின் வரவினை குறைப்பதற்கும் முட்டை உண்பதற்கும் இடையேயான இணைப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கோலைன் என்ற வேதிப்பொருள் செல்கள் இயல்பாக செயல்பட உதவுவதாக செய்சல் கூறினார். இந்த செயல்பாடு அனைத்து வயது,பாலின மக்களுக்கும் பொதுவானதாக இருப்பினும் பெண்களுக்கு, அதுவும் குழந்தை பெறக்கூடிய வயதுள்ளவர்களுக்கு, மிகவும் முக்கியமானதாக உள்ளது என்றும் அவர் கூறினார். ஒரு முட்டையில் 125.5 மி.கிராம் கோலைன் உள்ளது,இது ஒருநாளுக்கு ஒருவருக்கு தேவைப்படும் அளவில் கால்பங்காகும்.முட்டையின் மஞ்சள்கருவில் கிடைக்கிறது. கோலை கிடைக்கும் மற்ற உணவுப் பொருட்கள்: ஈரல், கோதுமை கருப்பகுதி, காலிபிளவர் பூ. கோலைன் பிறப்பு குறைகளை தவிர்ப்பதுடன் நினைவாற்றலை வளர்க்கவும் இதயநோய்களை தடுக்கவும் பயனாகிறது.
Eating eggs reduces breast cancer risk
குறிச்சொற்கள்: மார்பக புற்றுநோய், முட்டை, கோலைன், breast cancer, choline, eggsஇந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்