ஜெ., மீண்டும் முதல்வராக வேண்டி தலைகீழாக கிரிவலம் வந்த வாலிபர் | சற்றுமுன்...




ஜெ., மீண்டும் முதல்வராக வேண்டி தலைகீழாக கிரிவலம் வந்த வாலிபர்

ஜெ., மீண்டும் முதல்வராக வேண்டி தலைகீழாக கிரிவலம் வந்த வாலிபர்

திருவண்ணாமலை: ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி திரைப்பட உதவி டைரக்டர் திருவண்ணாமலையில் தலைகீழாக கிரிவலம் வந்தார். கோவையை சேர்ந்தவர் கிருஷ்ணன் (40). இவர் சென்னையில் திரைப்பட உதவி இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று திருவண்ணாமலையில் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி தலைகீழாக நடந்து 14 கி.மீ., கிரிவலம் புறப்பட்டார். பகல் நேரத்தில் வெயில் அதிகமாக இருப்பதால் ஐந்த நாட்கள் தொடர்ந்து இரவில் கிரிவலம் வர திட்டமிட்டுள்ளார். நேற்று முன்தினம் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கோபுர வாயற்படியிலிருந்து கிரிலவத்தை துவக்கினார். இவர் ஏற்கனவே மத நல்லிணகத்தை வலியுறுத்தி கடந்த 1993ம் ஆண்டு திருப்பதிக்கு 40 கி.மீ., தலைகீழாக நடந்து சென்றுள்ளார்.
 
 http://www.dinamalar.com/2008MAR21/district/thiru.asp

குறிச்சொற்கள்: , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்