அங்காடி தெருவிலிருந்து ஜெயமோகன் விலகினார்
எம்.ஜி.ஆர்-சிவாஜி ஆகிய இமயங்களை விமர்சித்த எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்திருந்தது. அத்துடன், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் அவர் வசனம் எழுதும் படங்களுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்று கூறியிருந்தது.
இதையடுத்து தான் இயக்கி வரும் அங்காடி தெரு படத்திலிருந்து ஜெயமோகனை விலகி கொள்ள சொல்லிவிட்டாராம் வசந்தபாலன். ஆனால், ஜெயமோகன் வசனம் எழுதிய நான் கடவுள் படம் சம்பந்தப்பட்டவர்கள் என்ன முடிவை எடுத்திருக்கிறார்கள் என்பது இன்னும் வெளியிடப்படவில்லை.
நன்றி: தமிழ் சினிமா
குறிச்சொல் ஏதும் இல்லை.இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
March 20th, 2008 at 3:15 pm
அநியாயம்!
March 20th, 2008 at 8:15 pm
Writer Jayamohan quits from Angadi Theru
March 21st, 2008 at 7:16 am
பாபா சொன்னதுதான் சரி..
ஜெயமோகனுக்கு தொடர்புள்ள எந்தப் படத்திலும் வேலை செய்ய மாட்டோம் என்று டெக்னீஷியன்கள் யூனியனும், லைட்மேன் யூனியனும் கடுமையாகவே எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன.
இந்த யூனியன்களின் மீட்டிங்குக்கு மட்டும் ஜெயமோகன் வந்து தன் மீதான அர்ச்சனையைக் கேட்டிருந்தால், மனிதர் இந்துமகா சமுத்திரத்தைத் தாண்டியே ஓடியிருப்பார். அந்த அளவுக்குக் காட்டமாக இருந்ததாம்..(நடிகர் சங்க மீட்டிங்கைவிட)
இயக்குநர் வசந்தபாலனுக்கு சங்கடம் கொடுக்கக் கூடாதே என்ற எண்ணத்தில் தானே விலகிக் கொள்வதாகச் சொல்லி விலகிவிட்டார். அவ்வளவுதான்.
ஆனால் வசனம் அவருடைய பெயரில்தான் வரும் போலிருக்கிறது. ஏனெனில் முழு வசனப் பிரதியையும் ஏற்கெனவே அவர் எழுதிக் கொடுத்துவிட்டார்.
இதே நிலைதான் ‘நான் கடவுள்’ படத்திலும். அப்படத்தின் போஸ்ட் புரொடெக்ஷன் வேலைகள்தான் தற்போது நடந்து வருகிறது. ஷ¥ட்டிங் முடிந்துவிட்டதால் அப்படத்திற்கு எப்பாதிப்பும் வராது..
ஆனால் ஜெயமோகன் தொடர்ந்து சினிமாவில் பங்கெடுப்பது சிரமம்தான்..
March 21st, 2008 at 7:36 am
ஜெயமோகன் என்ற எழுத்தாளர் சினிமாவில் ஈடுபட்டு உழைக்கும் வாய்ப்பை விகடன் வெற்றிகரமாக அழித்துவிட்டது. தமிழ் சினிமாவை நம்பியே வெளிவரும் விகடன் போன்ற மூன்றாந்தரப் பத்திரிக்கை வெட்கமில்லாமல் மன்னிப்புக் கேட்கும். ஜெயமோகன் கேட்காமலிருக்க்க வேண்டும் என்பதே என் விருப்பம்.
தமிழ் சூழலில் தமிழ் திரையுலகம் செலுத்தும் பாதிப்பு பெரியது. எழுத்தாளர்களைக் கேவலப்படுத்தும் தமி திரையுலகத்துக்கு எவராவது கண்டனம் தெரிவிக்க முடியுமா?
தமிழ் திரைப்படங்கள் அனைத்தையும் torrent களாக விநியோகித்து அவற்றின் சர்வதேச மார்க்கெட்டை முறையடிப்போம்.
March 22nd, 2008 at 1:10 pm
Why vikatan targets Mr.Jeyamohan?
Do any body know?
Pls Reply…………..
March 25th, 2008 at 12:40 am
Freedom is very important to everybody. Vikatan did a foul play, without knowing its consequences (that is what I think). Actually it was an act of immaturity. It is very clear that making money and survival are the only motives, these magazines have. Magazines like vikatan are in shortage of hot news.
Cine field is a different area. AS NTR is the Lord Krishna to some of the people, these actors are mini gods to many Tamils. Cine field is a very complex community in which there are many tiers.
Tamil people cannot differentiate between right and wrong. Still we have great leaders like Nallakannu(Communist Party). We(many Tamils) are very emotional and ignorant. Many Tamils are not humorous at all. Will we change? We may change; but, it will take centuries.
March 25th, 2008 at 2:04 am
Eventhough thiru jayamohan is a good writer he might forgot one thing i.e today tamilians are pretending as “more emotional”. The application of criticism applied against some hapless people. When the so called self respect movement indulged in third rate criticism against “Violent” brahmins and hindu sentiments it was labelled as “karuththu sudhanthiram”. In many fields “karuththu sudhanthiram” is being kept in “savapetti”. But one thing I would like to convey to Thiru Jayamohan, we can not become more popular than MGR and Sivaji Ganesan only by criticising the matinee idols and certainly we cant express any negative opinions agianst contemporary “heroes” too. Because they are the “Savious” of the Tamilians and Tamil Culture
March 29th, 2008 at 8:03 am
இதில் விகடனின் தப்பு ஒன்றும் இருப்பதாய் தெரியவில்லை! சில வரிகளை ஜெயமோகன் அவ்வளவு காட்டமாகவும் குரூரமாகவும் எழுதி இருந்தது எந்த வகையிலும் பத்திரிகை சுதந்திரத்தில் சேரத் தகுதியில்லாதது! அதற்காக சினிமாத்துறையினர் அர்த்தமற்ற ஆவேச மற்றும் உக்கிர வார்த்தைகளை அவர்மீது உகுப்பது தவறு! ஜெயமோகனும் இனி இதுபோல் எழுத்துக்களை குறைத்துக் கொண்டு உறுப்படியாக ஏதாவது எழுத முயற்சி செய்யலாம்.. !