லண்டனில் சர்தாரி முடித்த பட்டப்படிப்பு : எங்கு தேடியும் கல்லூரியை காணோம்
லண்டனில் சர்தாரி முடித்த பட்டப்படிப்பு : எங்கு தேடியும் கல்லுõரியை காணோம்
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தேர்தலில், போட்டியிட குறைந்த பட்சம் இளநிலை பட்டப் படிப்பு சான்றிதழ் பெற்றிருக்க வேண் டும். அந்நாட்டு, பிரதமராகப் போகும் சர்தாரி, லண்டனில் உள்ள “பெடின்டன்’ வர்த்தகவியல் கல்லுõரியில், பி.எட்., பட்டம் பெற்றிருப்பதாக கூறியுள்ளார். ஆனால், அப்படி ஒரு கல்வி நிறுவனமே இல்லை என்பது தான் சுவாரஸ்யம்.
பாகிஸ்தானில், 2002ம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்ட போது, போட்டியிடுவதற்கு குறைந்த பட்ச கல்வித் தகுதியாக, இளநிலை பட்டப்படிப்பை நிர்ணயித்து, அதிபர் முஷாரப், புதிய சட்டம் கொண்டு வந்தார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர், மறைந்த பெனசிர் புட்டோவை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே, பிரிட்டனுக்கு சென்றார் ஆசிப் அலி சர்தாரி. 1970ம் ஆண்டுகளில், “லண்டன் ஸ்கூல் ஆப் பிசினஸ் ஸ்டடீஸ்’ என்ற கல்லுõரியில் இளநிலை பட்டப்படிப்பு பாடப்பிரிவில் சேர்ந்தார். ஆனால், அந்த படிப்பை முழுமை செய்யவில்லை என்று கூறப் படுகிறது. தனது சுயசரிதை புத்தகத்தில், “லண்டன் பெனிட்டன் ஸ்கூல்’ என்ற வர்த்தகவியல் கல்லுõரியில் படித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், லண்டனில் இந்த பெயரில் கல்வி நிறுவனம் ஒன்று, இருந்ததாகவோ, இருப்பதாகவோ ஆதாரம் இல்லை.
http://www.dinamalar.com/2008MAR20/world2.asp
குறிச்சொற்கள்: படிப்பு, பாகிஸ்தான், கல்லூரி, அரசியல்இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
March 20th, 2008 at 4:27 am
தினமலர் சொல்லியிருந்தா இட்டுக்கட்டப்பட்ட பொய்யா இருக்கும்.
March 20th, 2008 at 6:59 am
தகுதி - சரியாகத்தான் இருக்கு.