தமிழக நீதிமன்றம்: வரலாற்று சாதனை
தமிழக நீதிமன்றம்: வரலாற்று சாதனை
திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றாவாளிக்கு 7 நாளில் விசாரனை முடிந்து 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் காங்கேயத்தை சேர்ந்தவர் சாமியாத்தாள் கடந்த 09.03.08 அன்று ஏழு பவுன் நகையை மர்ம நபர் ஒருவர் பறித்து சென்றார். விசாரனையில் அதே ஊரைச் சேர்ந்த தங்கவேல் என்பவரிடமிருந்து சாமியாத்தாளின் நகை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸார் அவரை 13.03.08 அன்று கைது செய்து தாராபுரம் சார்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி ராமமூர்த்தி விசாரனையை மேற்கொண்டு குற்றவாளிக்கு 7 ஆண்டு கால தண்டனையை விதித்தார். தமிழக நீதிமன்ற வரலாற்றில் முதன் முறையாக 7 நாளில் விசாரித்து குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
குறிச்சொற்கள்: சாதனை, தமிழகம், நீதிமன்றம், வரலாறுஇந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
March 20th, 2008 at 12:38 am
7 பவுன் திருட்டுக்கு 7 ஆண்டு தண்டனை ரொம்ப அதிகம் !!