சரியாக படிக்காததால் ராணுவத்தில் என் தாயார் சேர்த்தார் - அதிபர் முஷரப் பேட்டி
சரியாக படிக்காததால் ராணுவத்தில் என் தாயார் சேர்த்தார்
அதிபர் முஷரப் பேட்டி
நான் படிக்கும்போது நன்றாக படிக்காததால் என் தாயார் என்னை ராணுவத்தில் சேர்த்தார் என்று பாகிஸ்தான் அதிபர் முஷரப் தெரிவித்தார். அவர் ஒரு டி.வி. சேனலுக்கு பேட்டி அளித்தபோது இதை தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், ராணுவத்திலும் படிக்கவேண்டும் என்பது என் தாயாருக்கு தெரியாது என்று அவர் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கூறியதாவது:-
பதவி உயர்வுக்காக நான் யாரிடமும் சிபாரிசுக்கு சென்றது கிடையாது. பாகிஸ்தானியர்கள் கடுமையாக உழைக்கக்கூடியவர்கள். புத்திசாலிகள். அவர்கள் பிரிவினைக்கு பிறகு நீண்ட தூரம் வந்து இருக்கிறார்கள். இருந்தபோதிலும் அவர்களிடம் தலைமைக்குணம் இல்லை. நான் வெளிப்படையானவன். குடும்பத்தோடும், ராணுவத்தோழர்களோடும் அனைத்தையும் பகிர்ந்து கொள்வேன். என் மகன் பிலால் மகள் அய்லா உடன் என் உறவு நட்பு ரீதியிலானாது. குழந்தைகளோடு நட்பு ரீதியாக இருக்கவேண்டும். அவர்களை வழிகாட்ட வேண்டும். பயிற்சி அளிக்கவேண்டும்.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=400686&disdate=3/18/2008
குறிச்சொற்கள்: தாயார், படிப்பு, முஷாரப், ராணுவம்இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்