ஹிட் லிஸ்டில் யார் யார்? பரபரப்பில் திரையுலகம்
அமெரிக்காவிற்கு கள்ளதனமாக ஆட்களை அழைத்து செல்ல உதவிய நடிகர், நடிகைகளின் பட்டியலை சென்னை அமெரிக்க தூதரக அதிகாரிகள் போலிஸ் கமிஷ்னர் நாஞ்சில் குமரனிடம் அளித்துள்ளனர். அந்த பட்டியலில் யார் யர்ர் பெயர் உள்ளது என்பது குறித்து திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
போலிஸிடம் அளிக்கப்பட்ட பட்டியலில் பிரபலமான டைரக்டர்களும், வெளி நாடுகளில் அடிக்கடி இசை நிகழ்ச்சி நடத்தும் இசையமைப்பாளர்களும், தங்கள் படங்களின் பாடல் காட்சிகளை வெளி நாடுகளில்தான் நடத்த வேண்டுமென வலியுறுத்தும் தயாரிப்பாளர்களும் என திரைப்படதுறையில் அனைத்து பிரிவை சேர்ந்தவர்களும் இடம்பெற்றுள்ளனர். அதில் முக்கியமாக நடிகர் ரஜினிகாந்தை வைத்து இயக்கிய பிரபல டைரக்டர், பிரபல தமிழ் இசையமைப்பாளர் ஒருவரின் தம்பியும் வெளிநாடுகளில் இசை கச்சேரிகளை நடத்தும் இசையமைப்பாளர்களும் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறதாம். இந்நிலையில் இதில் பெரும்பாலும் பலனடைந்தவர்கள் தயாரிப்பாளர்கள்தான், அதனால் எங்கள் பெயர் பாதிக்கப்படுகிறது என நடிகர் நடிகையர்கள் வருத்தப்படுகின்றனர். இந்த மோசடியில் நடிகர் நடிகையர் தொடர்பு உறுதியானால் அவர்களை தென்னிந்திய நடிகர் சங்கத்திலிருந்து நீக்குவோமென அதன் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். இப்பிரச்சனை குறித்து விவாதிக்க தயாரிப்பாளர் சங்கத்தின் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
http://www.thamizhmail.com/news.asp?id=133
குறிச்சொற்கள்: சட்டம், திரையுலகம், இசை நிகழ்ச்சி, காவல்துறை, அமெரிக்காஇந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்