பாக்: ஒரேநேரத்தில் இரு தற்கொலைபடை வாகனங்கள் வெடித்து 26 பேர் பலி | சற்றுமுன்...




பாக்: ஒரேநேரத்தில் இரு தற்கொலைபடை வாகனங்கள் வெடித்து 26 பேர் பலி

pak_blast.jpgபாகிஸ்தானின் பஞ்சாப் மாநில தலைநகர் லாகூரில் இன்று காலை 9:30 மணிக்கு டெம்பிள் தெருவில் அமைந்துள்ள அந்நாட்டு குற்ற ஆய்வு நிறுவனமான பெடரல் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சியின் தலையகத்தினுள் வெடிகுண்டுகளால் நிரப்பப்பட்ட சரக்குந்து ஒன்று அத்துமீறி நுழைந்து வெடித்ததில் 19 பேர் பலியானார்கள்.வெடிப்பின் பாதிப்பில் அந்த ஏழு மாடிக்கட்டிடம் மிகவும் சேதமடைந்துள்ளது.

அதேநேரம் மாடல்டௌன் பகுதியில் ஒரு சரக்குந்துவில் வெடிபொருட்களுடன் இரு தற்கொலைபடையினர் ஒரு வீட்டிற்குள் புகுந்து வெடித்துச் சிதறியதில் அவர்களும் அவ்வீட்டின் காவற்காரரின் இரு குழந்தைகளும் இறந்தனர். இவ்வீட்டின் அருகே புட்டோவின் கணவர் சர்தாரியின் வீடும் லாகூர் நகர நாசிம் அமீர் முகமது வீடும் உள்ளது. ஒரு விளம்பர நிறுவனத்திற்கு வாடகைக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. எதனால் இந்த வீட்டை தாக்கினார்கள் என்பது புரியவில்லை.

26 killed in twin car bombings in Lahore

குறிச்சொற்கள்: , , , , , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்