கறுப்பினத்தவருக்கு முன்னுரிமை வழங்கும் புதிய சட்டத்துக்கு ஜிம்பாப்வே அதிபர் முகாபே அங்கீகாரம்
இந்தச் சட்டம் நாட்டின் கறுப்பின மக்களுக்குப் பொருளாதார சுதந்திரத்தை வழங்கக்கூடியது என்கிறார் அதிபர் முகாபே. ஆனால் இது ஏற்கனவே திணறுகின்ற ஸிம்பாப்வே பொருளாதாரத்துக்கு மேலும் சிக்கலை உருவாக்கும் என்கிறார்கள் விமர்சகர்கள்.
ஜிம்பாப்வேயிலிருக்கும் அரசு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களில் கறுப்பின ஜிம்பாப்வே மக்களுக்கே பெரும்பான்மை அதிகாரம் வழங்கப்பட வேண்டும் எனும் ஒரு புதிய சட்டத்தை அதிபர் ராபர்ட் முகாபே அவர்கள் அங்கீகரித்திருப்பதாக அந்நாட்டின் அரச ஊடகத் துறை அறிவித்துள்ளது.
அதிபர் தேர்தலுக்கு இன்னமும் மூன்றே வாரங்கள் மீதமிருக்கும் நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் மோர்கன் ஸ்வங்கிராய் அவர்களிடமிருந்தும், தமது முந்நாள் நிதியமைச்சரான சிம்பா மகோனி அவர்களிடமிருந்தும் போட்டிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில் அதிபர் முகாபே இந்தப் புதிய சட்டத்துக்கு அங்கீகாரம் வழங்கியிருக்கிறார்.
நன்றி: பிபிசி
மேலும் விவரங்களுக்கு:
1. AFP: Zimbabwe passes law to give locals lion's share in firms: report
2. BBC NEWS | Africa | Mugabe approves new ownership law
குறிச்சொல் ஏதும் இல்லை.இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்