பிறந்தநாள்: சோ, நம்பியார் உள்ளிட்டோரிடம் ஜெயலலிதா ஆசி | சற்றுமுன்...




பிறந்தநாள்: சோ, நம்பியார் உள்ளிட்டோரிடம் ஜெயலலிதா ஆசி

Host unlimited photos at slide.com for FREE!

இதனிடையே, ஜெயலலிதா வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், ‘தன்னை பாஜக மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் சந்திக்கப் போவதாக வெளியாகியுள்ள செய்திகள் தவறானவை’ என்று தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனது 60 - வது பிறந்தநாளை முன்னிட்டு பத்திரிகையாளர் சோ. ராமசாமி, நடிகர் எம்.என். நம்பியார் உள்ளிட்ட 7 பேரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். இது தொடர்பாக அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனது 60-வது பிறந்தநாளை முன்னிட்டு

  • மூத்த திரைப்பட இயக்குநர் முக்தா வி. சீனிவாசன்,
  • பிரபல கல்வியாளர் திருமதி ஒய்.ஜி. பார்த்தசாரதி,
  • பரதநாட்டிய ஆசிரியை கே.ஜே. சரசா,
  • நடிகர் எம்.என். நம்பியார்,
  • திரைப்பட தயாரிப்பாளர் கே. பாலாஜி,
  • பத்திரிகையாளர் சோ. ராமசாமி,
  • ஆடிட்டர் ஜி. நாராயணசுவாமி

ஆகியோரின் இல்லங்களுக்கு வெள்ளிக்கிழமை (மார்ச் 7) நேரில் சென்று சந்தித்தார். அப்போது, அனைவரும் தங்களது மனப்பூர்வமான ஆசிகளை ஜெயலலிதாவுக்குத் தெரிவித்தனர்

.நன்றி: தினமணி

மேலும் விவரங்களுக்கு:

1. The Telegraph - Calcutta (Kolkata) | Nation | Jaya-Jaswant meet buzz

2. » Jayalalitha turns to poetry on International Women’s Day

3. The Hindu News Update Service: “I did not meet any BJP leader: Jayalalithaa”

குறிச்சொல் ஏதும் இல்லை.

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



2 மறுமொழிகள் to “பிறந்தநாள்: சோ, நம்பியார் உள்ளிட்டோரிடம் ஜெயலலிதா ஆசி”

  1. revathinarasimhan சொல்கிறார்:

    இதனால் தெரிய வருவது,
    யாராயிருந்தாலும் அன்பும் ஆசீர்வாதங்களும்
    தேவையாகத் தான் இருக்கிறது!!

  2. வடுவூர் குமார் சொல்கிறார்:

    60 க்கு என்று ஸ்பெசலா?

உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்