கண்ணூரில் அரசியல் கொலைகள்: மம்மூட்டி, மோகன்லால் அமைதிகாக்க வேண்டுகோள் | சற்றுமுன்...




கண்ணூரில் அரசியல் கொலைகள்: மம்மூட்டி, மோகன்லால் அமைதிகாக்க வேண்டுகோள்

mammooty_mohanlal.jpgகடந்த மூன்று நாட்களாக கேரளா கண்ணூர்/ தலைச்சேரி பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்களுக்கும் பிஜேபி/ஆர் எஸ் எஸ் கட்சியினருக்கும் இடையே நடக்கும் அரசியல் வன்முறையில் ஆறு உயிர்கள் இழக்கப்பட்டிருக்கின்றன.

புதனன்று மதியம் ஆர் எஸ் எஸ் தலைவர் சுமேஷ் தலைச்சேரியில் ஒரு கும்பலால் தாக்கப்பட்டார். இதன் எதிரொலியாக வியாழனன்று இரு கட்சிகளுக்கும் இடையே நடந்த வன்முறையாட்டத்தில் மூவர் பலியாயினர்.வெள்ளியன்று மா.கம்யூனிஸ்ட் ஒருவரின் உடல் கண்டறியப்பட்டுள்ளது.

வெள்ளியன்று இப்பகுதியில் ஆளும் இடதுசாரி அரசு வன்முறையை கட்டவிழ்த்துள்ளதாக பிஜேபி கடையடைப்பு நடத்தியது.

தளரும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையடுத்து எதிர்கட்சித் தலைவர் உம்மன் சாண்டி வரும் ஞாயிறன்று உண்ணாவிரதம் போராட்டம் நடத்துகிறார்.

இந்த பின்னணியில் மலையாள திரைப்பட உலகில் சூப்பர்ஸ்டார்களாக விளங்கும் மம்மூட்டியும் மோகன்லாலும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கண்ணூர் மக்கள் அமைதி காக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். அமைதி திரும்புவதற்கான எந்த உதவியையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் அமைதி ஏற்பட்டவுடன் திரையுலக நட்சத்திரக்குழு ஒன்று பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று அங்குள்ளவர்களுடன் பேசி நிரந்தர அமைதிக்கான வழிவகை செய்வோம் எனவும் மம்மூட்டி குறிப்பிட்டார்.

IANS செய்தி

குறிச்சொற்கள்: , , , , , , , , , , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்