சரத்குமார்: ‘மன வியாதியைக் காட்ட ஏதோ ஒரு இணையதள பிளாக்கில் கிறுக்கிய எழுத்துக்கள்’ | சற்றுமுன்...




சரத்குமார்: ‘மன வியாதியைக் காட்ட ஏதோ ஒரு இணையதள பிளாக்கில் கிறுக்கிய எழுத்துக்கள்’

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போன்ற புகழ்பெற்ற நடிகர்கள் மற்றும் தலைவர்களை அவமானப்படுத்தும் விதமாக செய்திகள் வெளியிடுவது அல்லது தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்புவதைக் கண்டித்து நடிகர் சங்கம் சார்பில் வரும் ஞாயிற்றுக்கிழமை கூட்டம் நடக்கிறது.

சமீபத்திய ஆனந்தவிகடனில், எம்.ஜி.ஆர். மற்றும் சிவாஜி கணேசன் ஆகியோர் குறித்து மூத்த எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கட்டுரை வெளியாகியிருந்தது.

அதில், எம்.ஜி.ஆர் தன் இறுதி நாட்களில் பேச முடியாமல் அவதிப்பட்டதைக் கிண்டலடித்து எழுதியிருப்பதாகக் கூறி ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரே உண்ணாவிரதப் போராட்டமும் நடந்தது. நடிகர் சங்க செயலாளர் ராதா ரவியும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டார். இந் நிலையில் இந்த விவகாரத்தில் நடிகர் சங்கமும் தலையிட்டுள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் தலைவர் சரத்குமார் மற்றும் செயலாளர் ராதா ரவி கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில்:

இந்திய திரையுலகின் சகாப்தங்களாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இருவரையும் தரக் குறைவாக எழுதப்பட்ட கட்டுரையை வெளியிட்டு வார இதழ் தனது பாரம்பரியத்துக்கு களங்கம் தேடிக் கொண்டுள்ளது.

அந்தக் கட்டுரையை அந்த இதழுக்காக அவர் எழுதியதல்ல. தனது மன வியாதியைக் காட்ட ஏதோ ஒரு இணையதள பிளாக்கில் கிறுக்கிய எழுத்துக்கள் அவை. அதை தானாக வலியச் சென்று வார இதழ் வெளியிட வேண்டிய அவசியமென்ன?.

இந்தப் போக்கை தென்னிந்திய நடிகர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

இதுமட்டுமல்ல, தொலைக்காட்சியிலும் இதுபோன்ற அநாகரிக செயல்கள் தொடர்ந்து நடக்கின்றன. இவற்றுக்கு நமது கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் வரும் மார்ச் 9ம் தேதி நடிகர் சங்கத்தின் சார்பில் கண்டனக் கூட்டம் நடைபெறுகிறது.

சங்கத்தின் அனைத்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களும் இதில் பங்கேற்கிறார்கள்.

வார இதழையும் எழுத்தாளரையும் கண்டித்து இக்கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன என அதில் கூறப்பட்டுள்ளது.

ரஜினி, கமல், உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்பார்கள் என நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.

நன்றி: தட்ஸ்தமிழ்

குறிச்சொல் ஏதும் இல்லை.

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



4 மறுமொழிகள் to “சரத்குமார்: ‘மன வியாதியைக் காட்ட ஏதோ ஒரு இணையதள பிளாக்கில் கிறுக்கிய எழுத்துக்கள்’”

  1. முத்துக்குமார் சொல்கிறார்:

    கேமரா முன்னால் கதாநயகியரை துகிலுரிந்து தலை முதல் கால்வரை மார்கழி மாத நாய்கள் போல மோப்பம் பிடித்தும் மேய்ந்தும் அதை விற்று வக்கிரம் வளர்ப்பதும், அதில் வயிறு வளர்ப்பதும்தான் மிகுந்த மன ஆரோக்கியமுள்ளவர்கள் செய்வது போலும்.

    ஆசனவாய் வழியே சிரிக்கத்தோன்றுகிறது.

    அன்புடன்
    முத்துக்குமார்

  2. சரத்குமார் இல்லை சொல்கிறார்:

    எல்லாருக்கும் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும் உரிமை இருக்குது. நடிகர்களும் தங்கள் எதிர்ப்பை நியாயமான முறையில் வெளியிடுவது சரியானதே. மன நோய் என்றெல்லாம் சொல்வது கண்டிக்கத் தக்கது. (அதை அங்கதமாகச் சொல்லியிருக்கலாம் )

    சினிமாவால் குறைசொல்லப்படாத துறையே இல்லை. எவருடைய செண்டிமெண்டுக்கும் அவர்கள் மதிப்பளிப்பதில்லை. தமிழ்நாட்டில் தெய்வங்களை எளிதில் பழித்துவிடலாம் ஆனால் சில தலைவர்களைக் குறித்து ஜோக்கடித்தால் ஆகாது.

    தங்களின் அரசியல் பலங்களை வெளிக்காட்ட சினிமாக்காரர்கள் வாய்ப்பை தேடிக் கொண்டே இருப்பார்கள். தமிழ் எழுத்தாளர்கள் உள் அரசியலில் உடைபட்டுக் கிடப்பதால் இவர்கள் என்னவேண்டுமென்றாலும் சொல்லிவிடலாம்.

    அங்கே ஒரு நடிகர் தன் சாதிக் காரர்களை தீண்டினால் தமிழ்நாடு தாங்காது என தமிழகத்து ராஜ் தாக்கரேயாட்டம் ஒளறிட்டிருக்காரு(சீண்டினால் தமிழகம் தாங்காது-கார்த்திக் எச்சரிக்கை) அத எதிர்த்து அவருக்கு புத்தி சொல்ல ஆளில்ல.

    அரசியல் கட்சிங்க என்னண்ணா நடிகரின் கட்சியோடு கூட்டணி வைக்க மாட்டோம்ணு அறிக்கை விடுறாங்க. அது இவங்களுக்கு கேவலமாப் படல. என்ன சொல்றது? சூடு சொரண இருந்தா அந்த நடிகருக்கு ஆதரவா பேசட்டுமே? நடிகரை கேவலமாகப் பேசிய அரசியல் தலைவர்களை காலில் விழுந்து மன்னிப்பு கேட்கச் சொல்லட்டுமே? அதெல்லாம் ஆகாது.

    சினிமா எல்லா துறைகளையும் விமர்சிக்கும். ஆனா அவங்க துறையை மட்டும் விமர்சிக்கவே செய்யாது. அப்படி தப்புத் தவறி ஒருத்தன் படம் எடுத்துட்டான் தொலைஞ்சான்.

    சினிமாக்காரர்களுக்கு முதலில் தெரிய வேண்டிய நடிப்பு முகஸ்துதி. அநேகமா பலரும் இதில் தேறியவர்கள். சுயதுதி பாடிக்கொண்டே இருக்கவேண்டும். சுற்றி துதி பாடிக் கொண்டிருக்க நடுவில் அனந்த சயனத்தில் கண்மூடி கனவு காணும் கடவுள்கள் நிறைந்த சொர்க்கபுரிதான் சினிமா.

    இவங்க கோவில் கட்டி கும்பிடுற தெய்வங்கள நாமளும் கும்பிடணுமின்னு நெனைக்கிறாங்க பாருங்க. அங்கதான் இடிக்குது.

    எல்லாம் மொதல்ல சிரிக்கத் தெரிங்சுக்குங்க மச்சி. அப்புறம் உங்க காமெடி கலாட்டாவ நாங்களும் பார்த்து சிரிச்சிக்குறோம்.

  3. வசனத்தை நடித்துக் காட்டுவது போல் சரத்தும் தயார் செய்த அறிக்கையை படித்துக் காட்டுகிறார்.

    ‘வலைப்பதிவை படிக்கலாம் போல’ என்று எண்ணுபவர் கூட இந்தக் கூத்தை அரசல் புரசலாக கேட்டுவிட்டு ‘அப்யூஸிவா எழுதுறாங்க. ஸோ வேண்டாம்’ என்று (சுஜாதா போல் ;) ஒதுங்க வாய்ப்பு அளித்து தந்திருக்கிறது சரத்+விகடன்.

    பெட்டிசன் போடுவது போல் கண்டன அறிக்கை தயார் செய்து, கையெழுத்திட்டு, அனைத்து ஊடகங்களுக்கும் (டிவி/வலையகம்/நாளிதழ்/வாராந்தரி) அனுப்புவது நடிகர் சங்கத்தின் முதிர்ச்சியின்மையை வெளிக்கொணரலாம் :P

    தொடர்புடைய விவாதம்: சன்னாசி - அண்டை அயல்: Flush The Lit.

    வருத்தத்துடன் கண்டிக்கிறோம்: Thinnai: “வன்முறையைத் தூண்டும் விதமாக விகடன் நடந்து கொள்வதை வருத்தத்துடன் கண்டிக்கிறோம்”

  4. […] ஸ்டெல்லா புரூஸ் தற்கொலைசரத்குமார்: ‘மன வியாதியைக் காட்ட ஏதோ ஒ…ஹிட் லிஸ்டில் யார் யார்? பரபரப்பில் […]

உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்