யாரையும் மிரட்டவில்லை: நடிகர் விவேக்
வீட்டை காலி செய்யச் சொல்லி அடியாட்களுடன் வந்து மிரட்டியதாக வெளியான தகவலை நகைச்சுவை நடிகர் விவேக் மறுத்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியான செய்திக்கு நடிகர் விவேக் பதிலளிக்கையில், கே. கே. நகரில் உள்ள தனது வீட்டில் வசித்து வரும் எழுத்தாளர் சுப்ரஜாவை காலி செய்யும்படி கூறியது உண்மை என்றார்.
எனினும், அவரை அச்சுறுத்தியதாகவோ அடியாட்களைக் கொண்டு மிரட்டியதாகவோ கூறப்படுவது முழு கற்பனை என்ற விவேக், அந்த வீட்டுப்பக்கம் தான் சென்று 3 வருடங்கள் ஆவதாகச் சொன்னார்.
வீட்டை காலி செய்துவிடும்படி தான் கூறி விட்டபின்னரும் சுப்ரஜா அதற்கு மறுத்து வருவதாகவும், தன் மீது பொய்யான குற்றச்சாட்டை தெரிவித்த அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நடிகர் விவேக் கூறியுள்ளார்.
நடிகர் விவேக்கிற்கு சொந்தமான வீட்டில் குடியிருந்து வரும் எழுத்தாளர் சுப்ரஜா, தனக்கு விவேக் கொலை மிரட்டல் விடுத்ததாகவும், தன் வீட்டில் புகுந்து பொருட்களை சேதப்படுத்தியதாகவும், கே.கே. நகர் காவல்துறையில் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி: எம்.எஸ்.என்.
குறிச்சொல் ஏதும் இல்லை.இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
March 5th, 2008 at 9:43 pm
இந்த சிச்சுவேஷன் நல்லாயிருக்கே