மாநிலங்களவைத் தேர்தல்: திமுக கூட்டணி இட ஒதுக்கீடு அறிவிப்பு
திமுக தலைவர் முதல்வர் கருணாநிதியுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி
எதிர்வரும் மார்ச் 26 அன்று நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தல்களில் திமுக கூட்டணி சார்பாக திமுக மற்றும் காங்கிரஸ் தலா இரண்டு வேட்பாளர்களையும், மார்க்சிஸட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு வேட்பாளரையும் நிறுத்தும் என தமிழக முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி அறிவித்திருககிறார்.
தங்களுக்கும் ஒரு இடம் ஒதுக்கப்பட வேண்டுமென்ற பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்றும், ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெற அக்கட்சி ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவ்வறிககையில் கருணாநிதி கேட்டுககொண்டுள்ளார்.
சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிக்கும் இத்தேர்தல்களில், தமிழகத்தில் 34 வாக்குகளைப் பெற்றால்தான் ஒருவர் வெற்றியடைய முடியும்.
அந்த அளவில் 96 உறுப்பினர்களைக் கொண்ட திமுக மேலும் ஆறு உறுப்பினர் ஆதரவு இருந்தாலே மூன்று இடங்களைக் கைப்பற்ற முடியும் எனறாலும்கூட தோழமைக் கட்சிகளுக்காக விட்டுக்கொடுத்து, அது இரண்டு இடங்களில் மட்டுமே போட்டியிட முடிவு செய்திருக்கிறது என கருணாநிதி தெரிவித்திருககிறார்.
மேலும் 2004ஆம் ஆண்டு தேர்தல்களில் பாமகவிற்கு ஓர் இடம் ஒதுக்கப்பட்டு அவ்விதமாக தேர்ந்தெடுக்கப்பட்டு மத்தியில் அமைச்சரானவர்தான் பாமக நிறுவனர் ராமதாஸின் மகன் அன்புமணி ராமதாஸ். அவரது பதவிக்காலம் 2010 வரை இருக்கிறது. இந்நிலையில் 18 உறுப்பினர்களைககொண்ட பாமக மேலும் ஓர் இடம் கோருவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்று கருணாநிதி கூறியிருக்கிறார்.
நன்றி: தமிழ் பிபிசி
குறிச்சொல் ஏதும் இல்லை.இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்