உச்சநீதிமன்ற உத்தரவு எதிரொலி: ஜர்தாரி மீதான ஊழல் வழக்குகள் நீக்கம்
பாகிஸ்தான் மக்கள் கட்சி இணைத் தலைவர் ஜர்தாரி மீதான 7 ஊழல் வழக்குகளையும், அந்நாட்டு ஊழல் தடுப்பு நீதிமன்றம் புதன்கிழமை நீக்கியது. பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் கடந்த வாரம் பிறப்பித்த உத்தரவையடுத்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பேநசீர் பதவி காலத்தில், அவரது கணவர் ஜர்தாரி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில், பேநசீர் மற்றும் அவரது கணவர் ஜர்தாரி ஆகியோரை, ஊழல் வழக்குகளில் இருந்து விடுவிக்கும் வகையில் அதிபர் முஷாரப் கடந்த அக்டோபரில், தனிச்சட்டம் ஒன்றை இயற்றினார். இச்சட்டத்துக்குத் தடைவிதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் முதலில் தடை உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம், கடந்த வாரம் அந்தத் தடையை நீக்கி உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து, ஜர்தாரி மற்றும் அவரது நெருங்கிய சக ரெஹ்மான் மாலிக் ஆகியோர் மீதான அனைத்து வழக்குகளையும் அந்நாட்டு ஊழல் தடுப்பு நீதிமன்றம் விலக்கிக் கொண்டுள்ளது. இதனிடையே, இதுகுறித்து கருத்து தெரிவித்த ஜர்தாரியின் வழக்கறிஞர் பாரூக் நாயிக், ‘ஜர்தாரிக்கு எதிரான அனைத்து வழக்குகளும் அரசியல் உள்நோக்கத்துடன் தொடுக்கப்பட்டவை என்றும், அவை அடிப்படை ஆதாரமற்றவை’ என்றும் தெரிவித்தார்.
நன்றி: தினமணி
மேலும் விவரங்களுக்கு:
1. BBC NEWS | South Asia | Court drops cases against Zardari
2. NDTV.com: PPP will announce PM on March 6
குறிச்சொல் ஏதும் இல்லை.இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்