கிரிக்கெட்:விறுவிறுப்பான ஆட்டத்தில் இந்தியா வெற்றி | சற்றுமுன்...




கிரிக்கெட்:விறுவிறுப்பான ஆட்டத்தில் இந்தியா வெற்றி

முத்தரப்பு ஒருதினப் போட்டித் தொடரின் இரண்டாம் இறுதி ஆட்டத்தில், ஆஸ்திரேலிய அணியை 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.இதனால் இந்த முத்தரப்பு போட்டித் தொடரை வென்று ஆஸ்திரேலியாவின் சொற்களை செயலால் வென்றுள்ளது.

இந்த வெற்றிக்கு, சச்சின் டெண்டுல்கரின் அதிரடி ஆட்டமும்(91), யுவராஜ் (38),அணித்தலைவர் தோனி(36)யின் நிதானமான ஆட்டமும் வித்திட்டன. பிரிஸ்பேனில் ஊலூன்காபா அரங்கில் நடந்து முடிந்த இப்போட்டியில், முதலில் ஆடத் தொடங்கிய இந்தியா 258 ஓட்டங்களை 9 விக்கெட் இழப்பிற்கு எடுத்தது.259 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 249 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது..

பிரவீண்குமார் அதிரடியாக மூன்றுவிக்கெட்களை ஆஸ்திரேலியா அணியின் 32 ஓட்டங்களுக்குள்ளேயே வீழ்த்தி வெற்றிக்கான வழி வகுத்தார். பின்னர் லீயின் விக்கெட்டை வீழ்த்தி 4/46 என்ற கணக்கில் தனது 10 ஓவர்களை வீசினார். மற்ற விக்கெட்களை சிரிசாந்த் (2/43),பதான் (2/54)மற்றும் ஹர்பஜன் (1/44) எடுத்தனர். யுவராஜ் ஹைய்டனை ரன் அவுட் செய்தார்.

குறிச்சொற்கள்: , , , , , , , , , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



2 மறுமொழிகள் to “கிரிக்கெட்:விறுவிறுப்பான ஆட்டத்தில் இந்தியா வெற்றி”

  1. தினேஷ் சொல்கிறார்:

    ஆஸ்திரேலியா என்றால், கிரிக்கெட்டின் முடி சூடா மன்னன் என்ற நம்பிக்கையை தகர்த்திய இந்திய அணிக்கு வாழ்த்துகள்.

  2. தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும் ஆனால் தர்மம் என்றோ ஒரு நாள் வெல்லும் வாயால் கிரிக்கெட் விளையாடிய பாண்டிங், சைமண்ட்ஸ், (இம்முறையும் அவுட்டாகியும் மைதானத்தைவிட்டு வெளியே செல்ல தயங்கியவர்) கிளார்க் போன்றோரின் டவுசரைக் கிழித்துவிட்டார்கள் டோணியின் சிங்கங்கள்.

உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்