தமிழகத்தில் 130 கணினி வழி ஆங்கில மொழி ஆய்வகங்கள் தொடங்கப்படும்: தங்கம் தென்னரசு
தமிழகத்தில் நிகழாண்டில் 130 கணினி வழி ஆங்கில மொழி ஆய்வகங்கள் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டம், திருக்குவளை அஞ்சுகம் முத்துவேலர் அரசு மேனிலைப் பள்ளியில் ரூ. 6 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள கணினி வழி ஆங்கில மொழி ஆய்வகத்தை வியாழக்கிழமை தொடக்கிவைத்து அவர் பேசியது:
கிராமப்புற மாணவர்கள் ஆங்கிலத்தைப் படிக்கவும், எழுதவும் ஆற்றல் பெற்றவர்களாக இருந்தாலும், ஆங்கில வழியில் பேசுவதில் அவர்களிடம் தயக்கம் உள்ளது.
இந்தத் தயக்கத்தைப் போக்கும் நோக்கத்தில்தான் தற்போது தமிழகப் பள்ளிகளில் கணினி வழி ஆங்கில மொழி ஆய்வகங்கள் தொடக்கப்படுகிறது. ஆங்கில வழிக் கல்விக்காக தமிழகத்தில் 1,800 ஆசிரியர்களை நியமிக்கத் திட்டமிடப்பட்டு இதுவரை 1,232 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.
கடந்த 2 தினங்களில் தமிழகத்தில் காலியாக இருந்த இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்காக பதிவுமூப்பு அடிப்படையில் 4,713 பேர் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 48 பேருக்கு இடைநிலை ஆசிரியர் பணி நியமன உத்தரவை வழங்கினார் அமைச்சர் தங்கம் தென்னரசு.
தமிழகத்தின் முதல் ஆய்வகம்: தமிழக முதல்வர் மு. கருணாநிதியின் பிறந்த ஊரான திருக்குவளையில் உள்ள அஞ்சுகம் முத்துவேலர் (முதல்வரின் பெற்றோர் பெயர்) மேனிலைப் பள்ளியில் தொடங்கப்பட்ட இந்த ஆய்வகம் தமிழகத்தில் தொடங்கப்பட்ட முதல் கணினி வழி ஆங்கில மொழி ஆய்வகமாகும்.
நன்றி: தினமணி
குறிச்சொல் ஏதும் இல்லை.இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
February 29th, 2008 at 2:26 am
பயிலகம் என்று சொல்வது பொருந்துமோ? ஆங்கிலத்துக்கு எதற்கடா ஆய்வகம் என்று குழம்பிப் போனேன்
February 29th, 2008 at 2:27 am
//இந்த ஆய்வகம் தமிழகத்தில் தொடங்கப்பட்ட முதல் கணினி வழி ஆங்கில மொழி ஆய்வகமாகும்.
//
அரசுப் பள்ளியில் தொடங்கப்பட்ட முதல் பயிலகம் என்று சொல்வது பொருந்தலாம். தனியார் பள்ளிகளில் ஏற்கனவே உள்ளன