உலக கேரம் சாம்பியன் இளவழகியின் துயரங்கள் | சற்றுமுன்...




உலக கேரம் சாம்பியன் இளவழகியின் துயரங்கள்

Ilavazhagi.jpgஉலகின் பிறநாட்டு விளையாட்டுவீரர்களுக்கு கோடிகளில் பணம் வழங்கும் இந்தியாவில் உலக அரங்கில் கேரம் விளையாட்டில் விருதுகளை சத்தமின்றி கொணர்ந்து சேர்க்கும் இளவழகியின் சாதனைகளை ‘கண்டு’கொள்ள நேரமெங்கே ? தானி ஓட்டுநரின் 24 வயது மகளான இவருக்கு தனது சாதனைகளை ஊடகங்கள் கவனிக்கவில்லையே என இருக்கும் மனவருத்தம் சொல்லில் வடிக்க முடியுமா ?
உலக அரங்கில் அவரது சாதனைகள் உலகசாம்பியன் பட்டம்வரை உயரும்போது அவரது வரவேற்பு குழுக்கள் அதே விகிதத்தில் குறைந்து வந்துள்ளது. பிரான்ஸின் கான்நகரில் நடைபெற்ற ஐந்தாவது உலக கேரம் போட்டியில் பெண்களூக்கான முதன்மை விருது பெற்றார். இவரை எதிர்த்து இறுதி ஆட்டத்தில் ஆடியவரும் இந்தியரே; நிர்மலா என்பவரை 25-11,25-11 என்ற கணக்கில் வென்றார். தவிர இந்தியாவில் பிப்.7இல் நடந்த போட்டிகளில் முதலாவதாக வந்தார்.

வடசென்னையின் வியாசர்பாடியைச் சேர்ந்த இளவழகி தானி ஓட்டுநர் இருதயராஜ் மற்றும் செல்விக்கு முதல் மகளாவார்.அவரது எதிர்காலம் என்ன என்பதே இருதயராஜின் கவலை. இளவழகி கடந்த ஒருவருடமாக ஒரு வேலை தேடியவாறே காரம் ஆடிவந்துள்ளார்.

பிரான்சிலிருந்து வெற்றிவாகை சூடி சென்னை பன்னாட்டு விமானநிலையத்திற்கு வந்த அவரை வரவேற்க அவரது தந்தையும் தங்கையும் சென்னை மாவட்ட காரம் அதிகாரிகளுமே இருந்தனர்.அவருக்குக் கொடுக்கப்பட்ட ஒரு மலர்கொத்தைக் கண்டே மிகவும் மகிழ்ந்தார்.

Did you know - world carom champ is Chennai girl

கடைசிச் செய்தி : இளவழகிக்கு தமிழ் மையம் ரூ. ஒரு இலட்சம் பரிசளிப்பு. அரசு உதவி அளிக்க கனிமொழி உறுதி

குறிச்சொற்கள்: , , , , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



7 மறுமொழிகள் to “உலக கேரம் சாம்பியன் இளவழகியின் துயரங்கள்”

  1. இளவழகிக்கு வாழ்த்துகள். இது போன்ற அதிகம் கவனிக்கப்படாத, ஆனால் கவனிக்கப்பட வேண்டிய செய்திகளுக்கு சற்றுமுன்னில் கூடுதல் வெளிச்சம் தரலாம். இந்த இடுகையை stickyயாக வைத்து இன்னும் நிறைய பேரைப் பார்க்கச் செய்யலாம். அல்லது பக்கப்பட்டையில் இவரது படத்தை வைத்து தொடுப்பு தரலாம்

  2. இளவழகி குறித்த தமிழ் விக்கிப்பீடியா கட்டுரை - http://ta.wikipedia.org/wiki/%.....5%E0%AE%BF

  3. phizo samraj சொல்கிறார்:

    congrads to ilavalahi.
    hope our kind chief minister would hep her in providing
    sufficient financial and moral support.

    phizo

  4. கவலையை விடுங்க இளவழகி.

    பாராட்ட யாருமில்லையே என நினைக்காதீர்கள். பாராட்டுக்காக நீங்கள் விளையாடவில்லை.

    உங்களால் இந்தியா பெருமையடைந்தது. அந்த விருது பெருமையடைந்தது.

    உங்களைப் பெருமைப்படுத்தாததில் நட்டம் இந்திய மக்களுக்குத்தானே தவிர உங்களுக்கு அல்ல.

    கிரிக்கெட்டில் கோடியில் ஏலம் போகிறார்கள். சோரம் போனதற்கு ஒப்பான செயல் விளையாட்டிலும் புகுந்த இழி நிலை உங்களுக்கு வராது. காரணம் பணத்துக்காக மட்டும் நீங்கள் விளையாடவில்லை. தாய்நாட்டின் மானத்தை அந்நிய நாட்டில் போற்றிப் புகழ்ந்து நிலை நிறுத்தியிருக்கிறீர்கள். இதைவிட ஒரு பெரிய விருது தேவையில்லை.

    மென்மேலும் பல வெற்றிக் கனிகளைத் தர வாழ்த்துகிறேன்.

  5. சற்றுமுன் சொல்கிறார்:
  6. phizo samraj சொல்கிறார்:

    It is a good news that ilavalagi got a cash prize.However, I feel, the financial support should be more and regular so that she can attend more competitions and perform well without any financial strain. I hope she would get more help from our Tamilnadu Government.God bless her efforts. She will win.

  7. Raja சொல்கிறார்:

    Dear Elavazhagi……
    Ungalal India perumai paduhiradhu. Siramathil - siharam adainthulleer!!! Kadal kadandhu naan erunthaalum, enn kannil vadiyum aananthak kanneeril ungalai vaalthuhiren!!! ennum pala vetrihal kandu naatukkum - ungalin veetirkkum perumai serungal tholi!!!! vaalha valamudan!!
    Anbudan,
    Raja / KSA

உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்