“வளர்ப்பு மகன் திருமணத்துக்கு கோடிக்கணக்கில் செலவழித்தவர் ஆடம்பர விழா குறித்து பேசுவதா? “
வளர்ப்பு மகன் திருமணத்துக்கு கோடிக்கணக்கில் செலவழித்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, ஆடம்பர விழா குறித்து அறிக்கை வெளியிடுவதா என்று தி.மு.க. பொருளாளரும், அமைச்சருமான ஆர்க்காடு வீராசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
‘தனி மனிதனின் ஆடம்பரத்துக்காக மின்சாரத்தை வீணடித்து மக்களை வேதனைக்கு உள்ளாக்குவதா‘ என்று ஜெயலலிதா வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கைக்கு, ஆர்க்காடு வீராசாமி வெளியிட்டுள்ள பதில் அறிக்கை:
வளர்ப்பு மகன் திருமணத்துக்காக 15 நாள்களுக்கு முன்பே அலங்கார விளக்குகள் போடப்பட்டு, மாநாட்டுப் பந்தலைப் போல் திருமணப் பந்தல் போடப்படவில்லையா?
அரசு விழாவில் கலந்துகொள்ள ஒரு மாவட்டத்துக்கு ஜெயலலிதா செல்லும்போது, அந்த நகரமே அலங்கரிக்கப்படவில்லையா? அரை மணி நேரம் நடைபெறும் விழாவுக்காக பத்து நாள்களுக்கு முன்பே விழா ஏற்பாடுகள் நடைபெறவில்லையா?
ஆனால், தை 1-ம் தேதியை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்ததற்காக முதல்வருக்கு நடத்தப்படும் பாராட்டு விழா அரசாங்க விழா அல்ல. அரசு சார்பில் பணம் செலவழிக்கப் போவதுமில்லை.
மின் அலங்காரம் செய்வோர் அந்த விளக்குகள் எரிகின்றனவா என்று சோதனை செய்யும் நேரத்தில் பார்த்துவிட்டு, நான்கு நாள்களுக்கு முன்னரே அலங்காரம் செய்யலாமா என்று ஜெயலலிதா கேள்வி எழுப்புகிறார்.
அவர் கூறுவதுபோல் மக்களின் வரிப் பணமோ, அரசுப் பணமோ இந்த விழாவுக்கு எந்த வகையிலும் செலவழிக்கப்படவில்லை. கருணாநிதிக்குத் தரப்படும் பாராட்டினை கண்டு மனம் பொறுக்காத காரணத்தால், இதுபோல் கூறிவருகிறார்.
நன்றி: தினமணி
குறிச்சொற்கள்: ஜெயலலிதா, கருணாநிதி, அரசியல்இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்