இரண்டாம் மனைவியின் பிள்ளைகளுக்குச் சொத்துரிமை உண்டு - உச்சநீதிமன்றம் தீர்ப்பு | சற்றுமுன்...




இரண்டாம் மனைவியின் பிள்ளைகளுக்குச் சொத்துரிமை உண்டு - உச்சநீதிமன்றம் தீர்ப்பு

இரண்டாவதாகச் செய்து கொள்ளப்பட்ட திருமணம் செல்லாது என்றாலும், அதன் மூலம் பிறந்த குழந்தைகளுக்குத் தந்தையின் சொத்தில் உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

முதல் திருமணம் நீடித்திருக்கும்போது, இரண்டாம் திருமணம் செய்து கொண்டாலும் அதன் மூலம் பிறக்கும் பிள்ளைகள் சட்டப்படிக்கான வாரிசுகள் தாம் என்று உச்சநீதி மன்ற பெஞ்ச் கூறியுள்ளது. வாரிசு எனக் கணவனால் குறிப்பிடப்பட்ட இரண்டாம் மனைவி, கணவனின் வேலை தொடர்பான - பின் பயன்களைக் கோரிப் பெறும் உரிமை உண்டு என்றும் அது அவருடைய பிள்ளைகளுக்கு அளிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பு கூறுகிறது.

ஆனால், இறந்த கணவருக்குச் சேரவேண்டிய தொகையில் - இரண்டாம் மனைவிக்கு ஏதும் உரிமை கிடையாது எனவும் தெளிவுபடுத்துகிறது.

நன்றி: விடுதலை

மேலும் விவரங்களுக்கு: The Hindu : National : Second wife’s children, not herself, entitled to property: apex court

குறிச்சொல் ஏதும் இல்லை.

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



5 மறுமொழிகள் to “இரண்டாம் மனைவியின் பிள்ளைகளுக்குச் சொத்துரிமை உண்டு - உச்சநீதிமன்றம் தீர்ப்பு”

  1. Prabhu Rajadurai சொல்கிறார்:

    இதுவெல்லாம் என்ன தீர்ப்பு, என்ன செய்தி என்று புரியவில்லை! சட்டத்தில் ஏற்கனவே இருப்பதுதான்…பல முறை தீர்ப்பளிக்கப்பட்டதுதான். புரட்சிகரமாக இந்த தீர்ப்பில் ஏதும் இல்லை!

    எனினும், உரிமைகளைப் பற்றி மக்கள் அறிந்து கொள்ள இந்த செய்தி உதவும் என்ற வகையில் மகிழ்ச்சி!

  2. ஓ!!

  3. […] முந்தைய சற்றுமுன்: இரண்டாம் மனைவியின் பிள்ளைகளுக்குச் … […]

  4. Rahul சொல்கிறார்:

    சட்டப்படி இரண்டாவது திருமணம் செல்லாதாம் ஆனால் இரண்டாவது மனைவி எனக் கூறப்படுபவருக்கு பிறக்கும் குழந்தைக்கு வாரிசுரிமை உண்டாம். வேடிக்கையாக இருக்கிறதே ?!!!

  5. M.Thajudeen சொல்கிறார்:

    Hi,

    This is an another confused Judgement from the Supreme Court Bench of India as Usual.

    Bye.

உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்