மருத்துவ துறை நூல்கள் தமிழில் மிக குறைவு: நூல் வெளியீட்டு விழாவில் ‘லேனா’ வேதனை
மருத்துவ துறை நூல்கள் தமிழில் மிக குறைவு நூல் வெளியீட்டு விழாவில் ‘லேனா’ வேதனை

மருத்துவத் துறை நுõல்கள் தமிழில் மிகவும் குறைவாக வெளி வருவதாக நூல் வெளியீட்டு விழாவில் லேனா தமிழ்வாணன் வேதனையுடன் தெரிவித்தார்.மணிமேகலை பிரசுரத்தின் சார்பில் 22 நுõல்கள் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. கீழ்பாக்கம் ஆங்கிலோ இந்தியன் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறும் புத்தக கண்காட்சி அரங்கத்தில் விழா நடந்தது. விழாவிற்கு இலக்கிய பேச்சாளர்பழ. கருப்பையா தலைமை வகித்தார். கல்கண்டு, குமுதம் வார இதழ்களின் துணை ஆசிரியர் லேனா தமிழ்வாணன் வரவேற்றார். ஒலிம்பிக் கார்ட்ஸ் நிறுவன அதிபர் நூர்முகமது முன்னிலை வகித்தார்.பொது நூலகத்துறை இயக்குனர் ரமணி, நடிகர்கள் நெப்போலியன், பாண்டியராஜன், டாக்டர் அக்பர் கவுசர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மணிமேகலை பிரசுர ரவி தமிழ்வாணன் தொகுத்து வழங்கினார். செய்தி வாசிப்பாளர் சங்கீதா அறிமுக உரையாற்றினார். உலகத் தமிழ் பண்பாட்டுக் கழகத் தலைவர் ரபியுதீன் நூல்களை பெற்றுக் கொண்டார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சதாசிவம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மணிமேகலைப் பிரசுர மேலாளர் மோகன்ராஜ் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் நூல் ஆசிரியர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.வரவேற்புரையாற்றிய லேனா தமிழ்வாணன் பேசியதாவது: ஒரே நேரத்தில் 22 நூல்கள் வெளியிடப் படுவது மிகப் பெரிய சாதனை. இறந்து போன தமிழ் எழுத்தாளர்களில் ஐந்து பேரின் நூல்கள் மட்டுமே தற்போதும் நல்ல முறையில் விற்பனையாகி வருகிறது. அதில் கல்கியையும், கண்ணதாசனையும், தமிழ்வாணனையும் குறிப்பிட்டுச் சொல்லலாம்.தமிழில் ஏராளமான நூல்கள் வெளி வந்து கொண்டிருந்தாலும், மருத்துவம் சம்பந்தமான நுõல்கள் மிக குறைவாகவே வெளி வந்துள்ளது. அதிலும் மருத்துவம் படித்தவர்கள் எழுதும் மருத்துவ நூல்கள் மிகவும் குறைவாகவே உள்ளது. இந்த நிலை மாற வேண்டும் என்பதற்காக நாங்கள் பாடுபட்டு வருகிறோம். இவ்வாறு லேனா தமிழ்வாணன் பேசினார்.விழாவில் பழ. கருப்பையா பேசியதாவது: சொல்லுக்கும், செயலுக்கும் இடைவெளி இல்லாமல் வாழ்ந்தவர் மகாத்மா காந்தி. அதனால் தான் சாதாரணமாக இருந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி மகாத்மா காந்தியாக மாறினார். காலத்தின் தேவைக்கு ஏற்ப கவிஞர்கள் எழுத வேண்டும். அப்படி எழுதியதால் தான் பாரதி இன்றளவும் போற்றப்படுகிறார். ஒரு நூல்தான் ஒருவரை உயர்த்த முடியும். எனவே நல்ல நூல்களை தேர்வு செய்து படியுங்கள் என்றார்.
குறிச்சொற்கள்: தமிழ், நூல், மருத்துவத்துறை, வெளியீட்டு விழாம், வேதனை, குறைவுஇந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
July 5th, 2008 at 6:08 pm
Manimekalai prasuram has published lot of good books for tamil community. Their complete catalog can be found in: http://tamilvanan.com/content/.....-prisuram/