முத்திரைத்தாள் வழக்கு: தீர்ப்பு தள்ளிவைப்பு | சற்றுமுன்...




முத்திரைத்தாள் வழக்கு: தீர்ப்பு தள்ளிவைப்பு

முத்திரைத்தாள் வழக்கு: தீர்ப்பு தள்ளிவைப்பு

முத்திரைத்தாள் மோசடி வழக்கில் குற்றத்தை ஒப்புக் கொண்டு, தெல்கி உட்பட ஐந்து பேர் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை, வரும் 30ம் தேதிக்கு சி.பி.ஐ., கோர்ட் தள்ளி வைத்துள்ளது. மேலும், சஸ்பெண்ட் செய்யப்பட்ட டி.ஐ.ஜி., முகமது அலி உட்பட ஐந்து பேர் மீதான வழக்கு தனியாக பிரித்து விசாரிக்கப்படும் என நீதிபதி அறிவித்தார்.

போலியாக முத்திரைத்தாள்களை அச்சடித்து விற்பனை செய்ததன் மூலம், அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பை ஏற்படுத்தியதாக அப்துல் கரீம் தெல்கி, நிஜாமுதீன், அப்துல் வாகித், ஜேக்கப் சாக்கோ, பீட்டர் கென்னடி, பாலாஜி, சஸ்பெண்ட் செய்யப்பட்ட டி.ஐ.ஜி., முகமது அலி, டி.எஸ்.பி., சங்கர், ராமசாமி சாது, நஸ்நீன் மற்றும் சர்பிராஸ் நவாஸ் ஆகிய 11 பேர் மீது சி.பி.ஐ., போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கு, சென்னை சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தெல்கி, அப்துல் வாகித், ஜேக்கப் சாக்கோ, பீட்டர் கென்னடி, பாலாஜி ஆகிய ஐந்து பேரும் குற்றத்தை ஒப்புக் கொள்வதாகக் கூறி ஏற்கனவே மனு தாக்கல் செய்திருந்தனர்.இந்நிலையில் இந்த வழக்கு, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் நீதிபதி வேலு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வீடியோ கான்பரன்சிங் மூலம் தெல்கி உட்பட ஐந்து பேரும் ஆஜராகினர். முகமது அலி உட்பட ஐந்து பேரும் நேரில் ஆஜராகினர். அப்போது குற்றத்தை ஒப்புக் கொள்வதாகக் கூறி தெல்கி உட்பட ஐந்து பேர் தாக்கல் செய்த மனுக்கள் மீதான உத்தரவை வரும் 30ம் தேதிக்கு தள்ளி வைப்பதாக நீதிபதி அறிவித்தார். குற்றச்சாட்டுகளை மறுத்த முகமது அலி உட்பட ஐந்து பேர் மீதான வழக்கு தனியாக பிரித்து விசாரிக்கப்படும் எனவும் நீதிபதி அறிவித்தார். ஏற்கனவே இவ்வழக்கின் குற்றத்தை ஒப்புக் கொண்ட சர்பிராஸ் நவாஸ் என்பவருக்கு ஐந்து ஆண்டு காலம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

www.dinamalar.com 

குறிச்சொற்கள்: , , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்