மதுரை தெப்பக்குளத்தில் படகு சவாரி துவக்கம்: சுற்றுலா பயணிகள் உற்சாகம் | சற்றுமுன்...




மதுரை தெப்பக்குளத்தில் படகு சவாரி துவக்கம்: சுற்றுலா பயணிகள் உற்சாகம்

மதுரை தெப்பக்குளத்தில் படகு சவாரி துவக்கம்: சுற்றுலா பயணிகள் உற்சாகம்

மதுரை மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் படகு சவாரி நேற்று துவங்கியது.

மதுரை மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் ஜன.23ம் தேதி காலை 10 மணி முதல் 10.30க்குள் தெப்ப உற்சவம் நடக்க உள்ளது. இதையொட்டி வறண்டு கிடந்த தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. சமீபத்தில் பெய்த பலத்த மழையின் காரணமாக வைகையில் வந்த வெள்ளத்தால் நிரம்பிய தெப்பக்குளம், சுற்றுலா பயணிகளுக்குகண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. தெப்பக்குளத்தில் நேற்று படகு சவாரி துவங்கியது. இதனை மீனாட்சி கோயில் இணை கமிஷனர் ராஜா நேற்று துவக்கி வைத்தார். ஒரு மோட்டார் பொருத்தப்பட்ட படகும், 3 பெடல் படகுகளும் இதற்காக ஒதுக்கப்பட்டு உள்ளன. விசைப் படகில் ஒரு நபருக்கு ரூ. 20ம், பெடல் படகில் பெரியவர்களுக்கு தலா ரூ.10ம், சிறியவர்களுக்கு தலா ரூ.5ம் கட்டணம் வசூலிக்கப்படும். ராஜா கூறுகையில், “படகு சவாரி வாரநாட்களில் காலை 9 மணி முதல் மதியம் 12 வரையும், மதியம் 3 மணி முதல் மாலை 5 வரையும், சனி, ஞாயிறு தினங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையும் நடைபெறும். மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக பணிக்கான திருப்பணிகள் மற்றும் மின்வேலைகள் சுமார் ரூ. 5 கோடி மதிப்பீட்டில் நடந்து வருகிறது. அம்மன் தங்க விமானத்தில் கூடுதல் திருப்பணி வேலைகள் சுமார் ரூ. 3.5 கோடி மதிப்பீட்டில் நடைபெற உள்ளது’ என்றார்.
 

குறிச்சொற்கள்: , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்