எழுத்தாளர்களுக்கு கருணாநிதி பொற்கிழி விருது | சற்றுமுன்...




எழுத்தாளர்களுக்கு கருணாநிதி பொற்கிழி விருது

எழுத்தாளர்களுக்கு கருணாநிதி பொற்கிழி விருது

சிறந்த எழுத்தாளர்களுக்கான “கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி விருது’ அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

2008-ம் ஆண்டுக்கான சிறந்த எழுத்தாளர்களுக்கான கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி விருது பெற்றவர்கள் விவரம்:

தமிழ் பொதுப்பிரிவில் சென்னை மா.சு.சம்பந்தம், தமிழ் கவிதை படைப்பிலக்கியப் பிரிவில் கோயம்புத்தூர் கவிஞர் புவியரசு, தமிழ் நாடகத்துறை பிரிவில் தஞ்சாவூர் மு.ராமசாமி, தமிழ் படைப்பிலக்கியப் பிரிவில் விருத்தாசலம் சு.தமிழ்ச்செல்வி, மலையாளம் படைப்பிலக்கியப் பிரிவில் சாரா ஜோஸப் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

விருதுக்கான சிறந்த எழுத்தாளர்களை கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம், முன்னாள் துணைவேந்தர் க.ப. அறவாணன், தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் சி.சுப்பிரமணியம் ஆகியோர் கொண்ட குழு தேர்வு செய்துள்ளது.

ஜனவரி 4-ல் சென்னையில் நடைபெறும் 31-வது சென்னைப் புத்தகக்காட்சி தொடக்க விழாவில் முதல்வர் கருணாநிதி இந்த விருதுகளை வழங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

www.dinamani.com 

குறிச்சொற்கள்: , , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



ஒரு மறுமொழி to “எழுத்தாளர்களுக்கு கருணாநிதி பொற்கிழி விருது”

  1. வாழ்த்துகள்

உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்