அகில இந்திய அளவிலான கேரம் போட்டி துவங்கியது
அகில இந்திய அளவிலான கேரம் போட்டி துவங்கியது
தேசிய அளவிலான 36வது ஜூனியர் கேரம் போட்டி, கோவை திருச்சி ரோட்டில் உள்ள ஆண்டாள் திருமண மண்டபத்தில் நேற்று துவங்கியது.விழா துவங்கியதும், வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு நடந்தது; தமிழகம், ஆந்திரா, அசாம், பெங்கால், சண்டிகர், சட்டீஸ்கர், ஐதராபாத், கர்நாடகா, கேரளா, குஜராத், மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, ஒரிசா, புதுச்சேரி, உ.பி., விதர்பா, ஹரியானா, ம.பி., பீகார் மாநிலங்களை சேர்ந்த 420 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.அதன்பின், துவக்க விழா நிகழ்ச்சி நடந்தது; அகில இந்திய கேரம் சங்க செயலாளர் சர்மா தலைமை வகித்தார். அவர் பேசியதாவது:தேசிய அளவிலான 18 வயதுக்கு உட்பட்ட ஜூனியர் மற்றும் 21 வயதுக்கு உட்பட்ட ஆண்கள், பெண்களுக்கான கேரம் போட்டி, கோவையில் முதன்முறையாக நடக்கிறது. கடந்தாண்டு நடந்த ஜூனியர் தேசிய கேரம் போட்டியில், முதல் ஐந்து இடங்களை பெற்றவர்கள் கோவையில் நடக்கும் போட்டியில் பங்கேற்கின்றனர்.
ஆண்கள் பிரிவில், உ.பி.,யை சேர்ந்த முகமது சாகிப், மகாராஷ்டிரா சுக்விர் கட்டோரியா, தமிழகம் ஸ்டாலின், சிலம்பரசன், அசோக் குமார், கோவை வீரர் சந்தோஷ்குமார் ஆகியோரும், பெண்கள் பிரிவில் மணிப்பூர் பன்ட்டி, ஜார்கண்ட் அம்ரிதா ப்ரீதம், உ.பி., காம்லா குப்தா, பீகார் தீபிகா, சுருச்சி, சண்டிகார் ஆகான்ஷா மற்றும் 21 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவு சாம்பியன் உ.பி.,யை சேர்ந்த இம்ரான்கான், பெண்கள் பிரிவில் ஜார்கண்ட் குஷ்புராணி ஆகியோரும் பங்கேற்கின்றனர்.இவ்வாறு, சர்மா பேசினார்.கோவை மாவட்ட கேரம் சங்க தலைவர் யுவராஜ் வரவேற்றார். அகில இந்திய கேரம் சங்க இணை செயலாளர் உதயகுமார், உதவி செயலாளர் ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு கேரம் சங்க தலைவர் சந்திரசேகரன், கோவை மாவட்ட சங்க செயலாளர் குணசேகரன் நன்றி கூறினார்.துவக்க நிகழ்ச்சியை தொடர்ந்து, ஒவ்வொரு மாநில அணிகளுக்கான குழு போட்டி துவங்கியது. நாளை முதல் ஆண்கள், பெண்கள் ஒற்றையர் போட்டி நடக்கிறது.
குறிச்சொற்கள்: போட்டி, கேரம்இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்