‘ஈழத் தமிழர்களுக்கு உதவ கருணாநிதி முயற்சிக்கவில்லை’ - பழ.நெடுமாறன் | சற்றுமுன்...




‘ஈழத் தமிழர்களுக்கு உதவ கருணாநிதி முயற்சிக்கவில்லை’ - பழ.நெடுமாறன்

உண்ணாவிரதம் இருந்தபோது, அதை முடித்துக் கொள்ளும்படியும், மத்திய அரசிடம் பேசி அனுமதி பெற்றுத் தருவதாகவும் முதல்வர் கருணாநிதி உறுதிமொழி கடிதம் கொடுத்தார்.

ஈழத் தமிழர்களுக்கு உதவ தமிழக முதல்வர் கருணாநிதி முயற்சி எடுக்கவில்லை என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார். விழுப்புரத்தில் அவர் நிருபர்களிடம் கூறியது:

புலிகள் தலைவர் பிரபாகரன் காயமடைந்ததாகக் கூறும் தகவல் உண்மையில்லை. ஏற்கெனவே இதுபோல் 4 முறை வதந்திகள் வந்துள்ளன. ஈழத்தில் பட்டினியால் வாடும் மக்களுக்காக செஞ்சிலுவைச் சங்கம் மூலம் உணவு மற்றும் மருந்துப்பொருள்களை அனுப்ப இந்திய அரசு இதற்கு அனுமதிக்கவில்லை.

டாக்டர் ராமதாஸ், வைகோ, நல்லக்கண்ணு, தா.பாண்டியன் உள்ளிட்டோரும் வேண்டுகோள் விடுத்தனர். இச் சம்பவம் முடிந்து 100 நாள்கள் ஆகின்றன. ஆனால் இதுவரை முதல்வர் கருணாநிதி எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை. இது தொடர்பாக அவரிடம் பேசுவதற்கு நான் நேரம் கேட்டு கடிதம் கொடுத்தேன். அதற்கும் எந்த பதிலும் இல்லை.

இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். எனவே பிப். 4-ம் தேதி நடைபெறும் இலங்கை சுதந்திர தின விழாவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் செல்லக் கூடாது. கடந்த 18-ம் தேதி செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி இலங்கை ராணுவத்துக்கு இந்தியா, சக்தி வாய்ந்த ரேடாரை வழங்க உள்ளதாகத் தெரிகிறது.

இதனை எதிர்த்தும், இந்தியா, இலங்கை விமானப்படை கூட்டு பயிற்சியை எதிர்த்தும் போராட்டங்கள் நடத்த உள்ளோம். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போன்றோர் தாங்கள் அரசியலில் இருக்கிறோம் என்பதைக் காட்டிக் கொள்வதற்காகவே தமிழகத்தில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக அடிக்கடி கூறி வருகின்றனர் என்றார் பழ.நெடுமாறன்.

பேராசிரியர்கள் த.பழமலய், பிரபா.கல்விமணி மற்றும் விழுப்பறையனார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

நன்றி: தினமணி

குறிச்சொல் ஏதும் இல்லை.

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



ஒரு மறுமொழி to “‘ஈழத் தமிழர்களுக்கு உதவ கருணாநிதி முயற்சிக்கவில்லை’ - பழ.நெடுமாறன்”

  1. Rev.Rajan சொல்கிறார்:

    Dear Publisher,

    So far any Chief Minister has not taken any bold step for the liberation. Even the people support this issue are treated as terrorist. But “Thamil Innam vellum, Illathai Aalum”

    IT is my worry is that The srilankan tamil issue also became politics and some are making political benefits out of it. It is a senstive issue of every single tamilians.

    Many tamilians are not aware of it.

உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்