தமிழகம்: மழைக்கு 49 பேர் பலி | சற்றுமுன்...




தமிழகம்: மழைக்கு 49 பேர் பலி

தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழையால் வெள்ளிக்கிழமை வரை 49 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல நீர் நிலைகளும், அணைகளும் நிரம்பி வழிகின்றன. வைகை, பாபநாசம், சாத்தனூர், அமராவதி அணைகள் நிரம்பியிருக்கின்றன. இந்த அணைகளிலிருந்து தண்ணீர் வெளியிடப்படுவதாலும் வெள்ளப் பெருக்கு பல இடங்களில் ஏற்பட்டுள்ளது.

82,000 ஹெக்டேர் விளைச்சல்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் 23,000 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 லட்சம் நிவாரணமாக வழங்கப்படுகிறது.

தமிழகம், பாண்டிச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வகம் தெரிவித்துள்ளது.

T.Nadu rain toll mounts to 49 - The Hindu

குறிச்சொற்கள்: , , , , , , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்