w00t - 2007இன் சொல்,விக்கிபீடியாவிலிருந்து விலக்கம் ! | சற்றுமுன்...




w00t - 2007இன் சொல்,விக்கிபீடியாவிலிருந்து விலக்கம் !

w00tshirts.jpg

2007ஆம் ஆண்டின் சொல் என்று மெரியம் வெப்ஸ்டர்  நிறுவனம், இணைய

விளையாட்டுவீரர்களிடம் (Online gamers) அதிகமாக புழங்கும் சொல்லான “w00t” ஐ தெரிந்தெடுத்துள்ளது. w00t..எழுத்தும் எண்ணும் இணைந்த சொல் மகிழ்ச்சியையும் வெற்றியையும் வெளிப்படுத்தும் சொல்லாக இணைய நுட்பவியலாரும் விளையாட்டு விசிறிகளும் பயன்படுத்துகின்றனர்.மரியம் வெப்ஸ்டரின் தலைவர் ஜான் மோர் இது புதுமையையாகவும் கலக்கலாகவும் இருப்பதால் சரியான தேர்வு என்றார்.

ஆனால் மாக்முர்ரே கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக உள்ள மெட்கால்ஃப் இதனை ஆதரிக்கவில்லை. இந்தச் சொல் மிகசிறிய வட்டத்திற்குள் புழங்கும் சொல், இது பரவுவதும் நிலைத்திருப்பதும் முடியாத செயல் என்றார். விக்கிபீடியாக் காரர்களும் இவர் கூற்றுடன் உடன்படுவதாகத் தெரிகிறது. திசம்பர் 12 முதல் இந்தச் சொல்லை விக்கிபீடியாவிலிருந்து நீக்க குழு உறுப்பினர்கள் தீர்மானித்திருப்பதாகத் தெரிகிறது.
டிஜிடல் இன்ஸ்பிரேஷன் தளத்திலிருந்து…

குறிச்சொற்கள்: , , , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



ஒரு மறுமொழி to “w00t - 2007இன் சொல்,விக்கிபீடியாவிலிருந்து விலக்கம் !”

  1. கேள்விப்படாத சொல்லாக இருக்கிறதே!

உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்