நடைபாதையில் தூங்கியவர்கள் மீது கார் ஏறி 2 பேர் பலி | சற்றுமுன்...




நடைபாதையில் தூங்கியவர்கள் மீது கார் ஏறி 2 பேர் பலி

ென்னையில் நடைபாதையில் படுத்துத் தூங்கிய கட்டுமானத் தொழிலாளர்கள் மீது தாறுமாறாக வந்த கார் ஏறியது. இதில் 2 பேர் பரிபாதமாக உயிரிழந்தனர். 9 பேர் படுகாயமடைந்தனர். அனைவருமே திருவண்ணாமலை மாவட்டம் போளூரைச் ேசர்ந்தவர்கள்.இன்று அதிகாலை 2 மணி அளவில் அந்த சாலை வழியாக சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி சென்றுகொண்டிருந்த கார் ஒன்றும் கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலை பாந்தாலி மருத்துவமனை வசிக்கும் பூசாரி வாஞ்சிநாதன் (23) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் ஒன்றோடொன்று வேகமாக மோதியது. இதில் பைக் தூக்கி வீசப்பட்டது. மேலும் கார் தாறுமாறாக ஓடி நடைபாதை மீது ஏறியது. இந்த பயங்கர விபத்தில் தூங்கிக் கொண்டிருந்த, கலசப்பாக்கத்தை சேர்ந்த படவேட்டான் என்பவரின் மனைவி முனியம்மாள் (வயது 45) சம்பவ இடத்திலேயே பலியானார். படவேட்டான், சின்னப் பொண்ணு, தட்சணாமூர்த்தி, மற்றொரு தட்சணாமூர்த்தி, குப்பன், ஏழுமலை, நடராஜன், ராஜேஷ், அப்பன், தர்மா ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.அனைவரும் சென்னை பெரிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நடராஜன் இன்று காலை இறந்தார்.

தட்ஸ்தமிழ் தளத்திலிருந்து…..

குறிச்சொற்கள்: , , , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



ஒரு மறுமொழி to “நடைபாதையில் தூங்கியவர்கள் மீது கார் ஏறி 2 பேர் பலி”

  1. […] 50 பேர் மீது ஏற்றி மூவரை பலிகொண்ட விபத்தில் தேடப்பட்டு வந்த NEPC நிறுவன தலைவர் […]

உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்