ஆங்கிலவழி கல்விக்கு பலியான மற்றொரு மாணவன் | சற்றுமுன்...




ஆங்கிலவழி கல்விக்கு பலியான மற்றொரு மாணவன்

மும்பையில் தொடரும் பதின்ம வயதினர் தற்கொலைகளில் ஒன்றாக இன்று வாயிற்காவலர் ஒருவரின் மகன் ஆங்கில பாடங்கள் புரியாததால் தனது மருத்துவக் கனவை தொலைத்து தற்கொலை செய்துகொண்டுள்ளான். பதினெட்டு வயது அபய் சிங் (செய்தி ஊடகம் கொடுத்த பெயர்) ஜோன்பூர் என்ற உபி கிராமத்திலிருந்து வந்து மும்பையில் திந்தோஷி பகுதியில் தங்கி ஜோகேஷ்வரியில் உள்ள இஸ்மாயில் யூசுஃப் கல்லூரியில் முதலாண்டு இளங்கலை விஞ்ஞானப் படிப்பு படித்துக் கொண்டிருந்தான். கூடவே தனது தந்தையின் வாயிற்காவல் பணியில் துணை புரிந்து வந்தான். அவனது தந்தையார் கூற்றுப்படி அவனது கனவு மருத்துவர் ஆக வேண்டும் என்பது. இருப்பினும் கல்லூரியில் ஆங்கிலத்தில் நடத்தப் பட்ட பாடங்களை மற்ற மாணவர்களைப் போல வேகமாக புரிந்துகொள்ள இயலாமல் மனம் நொந்தான். உபியிலிருந்து மும்பை வந்ததால் இங்குள்ளவர்களுக்கு இணையாக ஆங்கிலப் பாடங்களை புரிந்து கொள்ளமுடியாது ஒரு வருடம் தவறினாலும் பரவாயில்லை எனத் தான் கூறியபின்னரும் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டானே என அவர் வருந்தினார்.

மும்பையில் கடந்த ஏழு நாட்களில் நடக்கும் ஐந்தாவது பதின்மர் தற்கொலையாகும் இது. தந்தை புதிய உடை வாங்கித் தராததால் தற்கொலை செய்துகொண்ட 18 வயதுப் பெண்ணும் மதிப்புமிக்க  பள்ளியில் தேர்வொன்றில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் தற்கொலை செய்துகொண்ட 13 வயது பையனும் இதில் அடக்கம்.

IBNLive

English trouble drives aspiring doc to suicide

குறிச்சொற்கள்: , , , , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்